பீகாரின் பாகல்பூரில் 2 மாவட்டங்களை (பாகல்பூர்-ககாரியா) இணைக்கும் வகையில் கங்கை நதியின் மீது கட்டப்பட்டு வந்த பாலம் இரண்டாவது முறையாக இடிந்து விழுந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு பிப்.23ஆம் தேதி பீகார் முதல்வர் நிதிஷ் குமாரால் இந்த மேம்பால பணிகள் தொடங்கிவைக்கப்பட்டது.
3.1 கி.மீ நீளத்தில் 1,710 கோடி ரூபாய் செலவில் 100 அடி உயரத்தில் 4 வழி பாதையாக செல்லும் வகையில் இந்த பாலம் திட்டமிடப்பட்டது.
இதற்குமுன்பு 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் தேதி கட்டுமானத்தின் போதே அகுவானி-சுல்தாங்கஞ்ச் பாலம் இடிந்து விழுந்தது.
இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த முதல்வர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
Anyone demanding resignation? #Bihar
— Divya Gandotra Tandon (@divya_gandotra) June 4, 2023