நீரிழிவு நோயாளி வாழைப்பழம் சாப்பிடலாமா..?
நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது , இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதால், சர்க்கரை நோய் ஏற்படுகிறது.
நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழத்தை சாப்பிடலாம். கனியாத வாழைப்பழத்தில் அதிக எதிர்ப்புத் திறன் கொண்ட மாவுச்சத்தும் குறைவான சர்க்கரையும் உள்ளது. ஆனால் நன்கு கனிந்த வாழைப்பழத்தை தினமும் உட்கொண்டு வந்தால், அது இரத்த சர்க்கரை அளவை சட்டென்று அதிகரித்துவிடும். எனவே சற்று கவனமாக இருங்கள்.
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இதய ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக் கொள்ள உதவும். இது தவிர, வாழைப்பபழமானது பக்கவாதம் வரும் அபாயத்தை குறைக்கிறது மற்றும் எலும்புகளையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுவது , நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழத்தை சாப்பிடலாம். ஆனால் அளவாக சாப்பிட வேண்டும். நீரிழிவு நோய் இருப்பவர்கள் ஒரு நாளைக்கு சிரிய அளவு வாழைப்பழத்தை சாப்பிடலாம். இரத்த சர்க்கரை அளவில் ஏற்ற இறக்கங்கள் காண்பவர்கள், மருத்துவரின் பரிந்துரைக்கு பின்பு வாழைப்பழங்களை உட்கொள்ள வேண்டும். வாழைப்பழம் சாப்பிடும் போது, மற்ற பழங்களை அதிகம் எடுக்க கூடாது. இதனால் இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்க முடியும் .
நீரிழிவு நோய் உள்ளவர்கள் தங்கள் உணவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதோடு தினமும் தவறாமல் சிறிது நேரம் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
– நிரோஷா மணிகண்டன்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..