குழந்தை ஈஸியா பல் துலக்க டிப்ஸ்… அனைத்து அம்மாக்களும் தெரிந்து கொள்ளுங்கள்…
குழந்தைக்கு பல் வளராவிட்டாலும், குழந்தையின் ஆரம்ப பருவத்திலேயே வாய் வழி பராமரிப்பு பற்றி சொல்லிதர வேண்டும்.
6 மாதங்களுக்கு குழந்தைக்கு பால் பல் வளர்ந்தாலும், குழந்தையின் வாயை அதுக்கு துலக்க தெரியாது மற்றும் கொப்பளிக்க தெரியாது எனவே பெற்றோரான நீங்கள் தான் அதை கவனித்து தினமும் பல் துலக்கும் வழக்கத்தை கற்றுத் தர வேண்டும்.
குழந்தையின் பல் துலக்குவது ஒரு சவாலான வேலையாக இருக்கலாம். துலக்குதலை எளிதாக்குவதற்கு சில குறிப்புகளை பின்பற்றுங்கள்.
உங்கள் குழந்தைக்குப் பிடித்த பொம்மையின் மீது பல் துலக்குவதை நீங்கள் செய்து காட்டலாம். இந்த டெல் ஷோ டூ டெக்னிக் குழந்தையின் பயத்தைப் போக்குவதுடன் பல் துலக்குதலையும் ஏற்றுக்கொள்ளும்படி செய்கிறது.
2. குடும்ப செயல்பாடு
உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக பல் துலக்கும் பழக்கத்தை பின்பற்றுங்கள், முடியாவிடில் நீங்களும் உங்கள் மனைவியும் ஒன்றாக குழந்தையுடன் பல் துலக்கும் பழக்கத்தை செய்யுங்கள்.
3. வீடியோக்கள் மற்றும் இசை
சில பல் துலக்கும் வீடியோக்களையும் இசைகளையும் யூட்டூபில் இருந்து போட்டு காமித்து பல் துலக்குதலை ஊக்குவிங்க.
4. குளியல் மற்றும் பல் துலக்குதல்:
உங்கள் குழந்தை குளிக்கும் போது அவர்களுக்கு பிடித்த தண்ணீர் பொம்மையை கொடுத்து பல் துலக்க சொல்லி விளையாடுங்கள். இதனால் அவர்களுக்கும் இதனை செய்ய வேண்டும் என்று தோன்றும். பயமும் போகும்.
5. திருப்பங்களை எடுப்பது
மாறி மாறி துலக்க கற்று கொடுங்க, எ.கா: குழந்தையின் பல் துலக்க அம்மாவின் முறை ஒன்றும் அதற்கு பின் இப்போது குழந்தை அம்மாவின் பல் துலக்கட்டும்.
6. சிறந்த புன்னகை விளையாட்டு
யார் அதிகமாக வாய்விட்டு சிரிக்கிறார்கள் என போட்டி வைத்து குழந்தையுடன் விளையாடுங்கள். அப்படி விளையாடும் போது குழந்தையின் வாயை மெதுவாக துலக்குங்கள்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)