அட்டகாசமான ஓரியோ கேக் செய்யலாமா..!
தேவையான பொருட்கள்:
கேக் செய்ய:
ஓரியோ பிஸ்கட் 120 கிராம்( 3 பாக்கெட்)
சர்க்கரை அரை கப்
மைதா முக்கால் கப்
பேக்கிங் பவுடர் 1 ஸ்பூன்
பேக்கிங் சோடா 1 ஸ்பூன்
உருக்கிய உப்பில்லா வெண்ணெய் 1 கப்
காய்ச்சிய பால் 1 கப்
ஓரியோ கிரீம் ப்ரோஸ்டிங் செய்ய:
உப்பிலா வெண்ணெய் 200 கிராம்
ஓரியோ கிரீம்
சாக்லேட் கனாஷ் செய்ய
பிரெஷ் கிரீம் 200 மில்லி
டார்க் ஸ்வீட் சாக்லேட் 250 கிராம்
செய்முறை:
முதலில் ஓரிரோ பிஸ்கட் மற்றும் கிரீமை தனித் தனியாக பிரிக்கவும்.
பிஸ்கட்டை மட்டும் மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ள வேண்டும்.
அதில் சர்க்கரை,பேக்கிங் சோடா,பேக்கிங் பவுடர்,மைதா,உருக்கிய வெண்ணெய்,பால் சேர்த்து கிளறவும்.
இதனை நன்றாக பீட் செய்து கேக் டின்னில் ஊற்றவும்.
ஓவனை 180 டிகிரி செல்சியஸில் சூடு செய்து டின்னை இதில் வைத்து ஒரு மணி நேரத்திற்கு பேக் செய்ய வேண்டும்.
மற்றொரு பாத்திரத்தில் உப்பில்லா வெண்ணெய்,ஓரியோ கிரீம் சேர்த்து நன்றாக பீட் செய்ய வேண்டும்.
ஒரு ஃபேனில் பிரஷ் கிரீம் மற்றும் சாக்லேட்டை சேர்த்து உருக்கி அதை தனியே வைக்கவும்.
கேக்கின் மீது பட்டர் கிரீம் ப்ரோஸ்டிங் தடவி,கிரீம் மேல் மற்றொரு கேக்கை வைத்து,பட்டர் கிரீம் ப்ரோஸ்டிங் தடவ வேண்டும்.
கேக் மீது சாக்லேட் கனாஷ் ஊற்ற வேண்டும்.
பின் ஓரியோ பிஸ்கட்,பட்டர் கிரீம் ப்ரோஸ்ட்டிங் வைத்து கேக்கை அலங்கரிக்கலாம்.
அவ்வளவுதான் அட்டகாசமான ஓரியோ கேக் தயார்.