இந்தியாவின் தோலை தொடர்பு நிறுவனங்களின் முன்னணி நிறுவனமான jio நிறுவனம் டிஸ்னி+ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவுடன் கூடிய அனைத்துவித திட்டங்களையும் நீக்கியுள்ளது. சில தினங்களுக்கு முன் குறிப்பிட்ட சில திட்டங்களை மட்டும் நீடித்து வைத்திருந்த நிலையில் தற்போது அதையும் நீக்கி அதிர்ச்சியளித்துள்ளது.
jio நிறுவனம் தொடங்கிய முதல் இந்தியாவில் இணயதளம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்தது அதற்கு காரணம் jio அளித்த சலுகைகள். காலபோக்கில் jio தனது திட்டங்களை மாற்றியமைத்து வருகிறது, இந்நிலையில் சில தினங்களுக்கு முன் டிஸ்னி+ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவுடன் கூடிய அனைத்துவித திட்டங்களையும் நீக்கியுள்ளது இருப்பினும் ரூபாய். 1,499 மற்றும் ரூ.4,199 என 2 ப்ரீபெய்ட் திட்டங்களில் டிஸ்னி+ஹாட்ஸ்டாரை பெற்றுக்கொள்ளலாம் என்று இருந்த நிலையில் தற்போது அதிரடியாக நீக்கியுள்ளது.
இதனால் jio வாடிக்கையாளர்களுக்கு டிஸ்னி+ஹாட்ஸ்டாரைசந்தாவுடன் ரீசார்ஜ் திட்டத்தை பெற இயலாது. சந்தாவுடன் ரீசார்ஜ் திட்டத்தை பெற வேண்டும் என விரும்பினால் மற்ற நிறுவனங்களின் சிம் களை தான் நாட வேண்டும்