சென்னையை அடுத்த பனையூரில் உள்ள நடிகர் விஜய்யின் அலுவலகத்தில் தனது நற்பணி இயக்க உறுப்பினர்கள்,நிர்வாகிகள் மற்றும் தனது ரசிகர்களை சந்தித்தார் நடிகர் விஜய்.
வரும் பொங்கலுக்கு விஜய் நடித்த வாரிசு திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் ரசிகர்களுடன் சந்திப்பு நடத்தியுள்ளார் நடிகர் விஜய். அவ்வப்போது ரசிகங்களை சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்த நடிகர் விஜய் கடந்த சில வருடங்களாக ரசிகர் சந்திப்பு நடைபெறவில்லை. 5 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் நற்பணி இயக்க முக்கிய நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களை சந்தித்துள்ளது முக்கியத்துவமா பார்க்கப்படுகிறது.
பொங்கலுக்கு வாரிசு படத்துடன் நடிகர் அஜித் நடிக்கும் துணிவு படமும் வெளியாகவுள்ளதால் ரசிகர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியதாகவும் தெரிகிறது, மேலும் வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரு படங்களுக்கும் தெலுகு மாநிலங்களில் தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து விஜய் மக்கள் இயக்க பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இந்த சந்திப்பு குறித்து கூறுகையில், சிகராக இருந்தாலும் சரி அடிமற்ற தொண்டராக இருந்தாலும் அவர்களை சந்திப்பது தான் முதல் வேலை’ என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். மேலும் பலமாவட்டங்களில் இருந்து வந்திருந்த நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுடன் நடிகர் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.