சீனாவுடன் கை கோர்க்கும் பூட்டான்..! இந்தியாவிற்கு வர இருக்கும் புது சிக்கல்..?
இந்தியாவின் வடகிழக்கு பகுதியிலும் வடக்கு பகுதியிலும் சீனா தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்து கொண்டே வருகிறது.., அண்டை நாடான பூட்டான் சீனாவுடன் உறவில் நெருக்கம் காட்டி வருகிறது.., இதனால் இந்தியாவிற்கு பெரும் சிக்கல் காத்திருகிறது என எதிர்பார்க்கப்படுகிறது..
லடாக்கில் கால்வான் பள்ளத்தாக்கில் இந்தியா ராணுவத்திற்கும்.., சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்திற்கும் இடையே ஏற்பட்ட மோதலில் அந்த நாட்டின் ஒவ்வொரு நடவடிக்கையும் சீனா உன்னிப்பாக கவனித்து வருகிறது.., இந்த சமையத்தில் சீனாவும் பூட்டானும் நட்பாக பழகி வருவது பெரும் சேதத்தை ஏற்படுத்துமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது..
இந்தியாவை போலாவே சீனாவும் பூட்டானும் எல்லையை சரவாரியாக பிரித்து கொண்டுள்ளனர்.., இரு நாட்டிற்கும் இடையே சுமார் 764 கிமீ பரப்பளவில் எல்லை உள்ளது.. கடந்த 2020ம் ஆண்டு சீனா சக்தேங் வனவிலங்கு சரணாலயத்தை கேட்ட போது பூட்டான் அதை நிராகரித்துவிட்டது.., தற்போது இந்த பேச்சு வாரத்தையை சீனா மீண்டும் தொடங்கியுள்ளது..
இந்த ஆண்டு ஜனவரி மாதம் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை சீனாவில் உள்ள யுனான் மாகாணத்தின் தலைநகரில் இது பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அந்த அவையில் இனி வரும் காலங்களில் எல்லையை பிரிப்பது தொடர்பான பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்த வேண்டும் என முடிவு செய்துள்ளது.
இந்த முடிவின் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இரு தரப்பினரும் ஒரு நிபுணர் குழு அமைத்து கூட்டத்தை கூட்டி எல்லையை நிர்ணயிப்பதற்கான தொழில்நுட்பக் குழு ஒன்றை அமைத்துள்ளனர். தொழில் நுட்ப குழுவின் முதல் கூட்டமும் அதே மாதத்தில் நடந்துள்ளது.
இதன் பின் இந்தியாவிற்கு ஒரு சிக்கல் எழுந்தது.., ஹிமாலயன் ஹாங்க்ரிலாவின் வட மத்திய பிராந்தியத்தில் சீனா தனது பிராந்திய உரிமைகளை பூட்டானுக்கு விட்டு கொடுக்க தயாராகியுள்ளது.., அதே சமையத்தில் இதற்கு பதிலாக மேற்கு பூட்டானில் டோக்லாம் அருகே உள்ள சில பகுதிகளை சீனாவுக்கு பூட்டான் விடுக்கொடுக்க தயாராகியுள்ளது.. இதனால் டோக்லம் பீடபூமி மற்றும் 3 சந்திபுள்ளி இடங்களை சீனா தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது..
இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே இதற்கு முன் மோதல் போக்கு ஏற்பட்ட நிலையில் சீனா இந்த கட்டுப்பாட்டை கையில் எடுத்தால், இந்தியாவிற்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என சர்வதேச அரசியல் விமசகர்கள் தெரிவித்துள்ளனர்.
அதாவது இதன் மூலம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் நாட்டுடன் இணையும் சிலிகுரி வழித்தடத்தை முடக்க சீனா சதி செயல்களை செய்ய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என குற்றம் சாட்டியுள்ளனர்.
எனவே இந்த பிரச்சனையை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. பூட்டானுடன் இந்தியா பல ராஜதந்திர உறவுகளை கொண்டிருந்தாலும்.., எல்லை விவகாரத்தில் பூட்டானை, சீனா தூண்டி விட வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.
அதை சரிசெய்ய தற்போது இந்தியாவிடம் ஒரேயொரு துருப்பு சீட்டுதான் உள்ளது. அதாவது பூட்டானுடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தில், தேசிய நலன்கள் தொடர்பான பிரச்சினைகளில் ஒருவருக்கொருவர் நெருக்கமாக ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தை பயன்படுத்தி சீனாவின் முயற்சிகளை இந்தியா தோற்கடிக்க முடியும் என சில அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..