“அடிச்சு தூக்கு.. அடிச்சு தூக்கு..” லியோ வசூல்..? இந்த கத்தி வேற ரகம்..!!
தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்.., பல தடைகளை தாண்டி வெளியான லியோ படம் ஒரே நாளில் உலக அளவில் மாபெரும் வசூல் சாதனையை படைத்துள்ளது..
படத்தின் முதல் நாள் வசூல்.., 148.5 கோடி வசூல் ஆகியிருப்பதாக 7ஸ்க்ரீன் ஸ்டூடியோ.. சற்று முன் தகவலை வெளியிட்டுள்ளது..
இந்த ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் முதல் நாள் 100 கோடி வசூலையும்.., ஜவான் 129 கோடி வசூலையும் ஈட்டிய நிலையில்.., உலகிலேயே முதல் முறையாக… தளபதியின் “லியோ” மட்டுமே 149 கோடியை வசூல் செய்து இருப்பது முதல் முறையாகும்..
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிராண்ட் என்பதை நிரூபித்து விட்டார் என பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.. தளபதி விஜயின் பட வரலாற்றிலேயே.., 149 கோடி வசூல் என்பதை விட .., ஒரு படம் வெளியான முதல் நாளே இவ்வளவு படம் வசூல் சாதனை படைத்து இருப்பது முதல் முறை..
படத்தின் வசூல் சாதனை குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இன்று காலை பேட்டி அளித்துள்ளார்.. அதில் படத்திற்கு நாங்கள் பெரும் அளவில் ப்ரோமோஷன் கொடுக்கவில்லை..,
இந்த வெற்றியெல்லாம் ரசிகர்களை மட்டுமே சேரும்.., அதிகாலை காட்சிக்கு அனுமதி கொடுக்கவில்லை.., ஆடியோ லான்ச் கிடையாது.., ரோகிணி தியேட்டர் இருக்கைகள் சேதம், கடைசி வரை தியேட்டர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் இடையே ஷேர் பங்கீட்டு என பல பிரச்சனைகள் இருந்தாலும்.., எங்களை பல கத்திகள் குத்தினாலும், இந்த கத்தி வேற ரகம் என காட்டிவிட்டார் தளபதி விஜய்… என லோகேஷ் கனகராஜ் பெருமிதம் தெரிவித்துள்ளார்..
Discussion about this post