கள்ள காதலில் வீழ்ந்த கணவனால் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!! பரபரப்பில் பெரம்பலூர்..!!
பெரம்பலூர் அருகே கள்ள காதலுக்கு இடையூறாக இருந்த மனைவியை கூலிபடையை வைத்து கொலை செய்த கணவர் கைது..,
பெரம்பலூர் அருகேயுள்ள எளம்பலூர் என்ற கிராமம் இருக்கிறது.., இந்த கிராமத்தில் ராஜ்குமார் வயது 33.., இவரது மனைவி பிரவீனா 25.., இவர்களுக்கு சர்வேஷ் 5 வயது, யோகித் 3 வயது என்ற இரு மகன்கள் இருகின்றனர்..
ராஜ்குமார் பெரம்பலூரில் உள்ள ஒரு டயர் பேக்டரியில் வேலை பார்த்து வருகிறார்., மனைவி பிரவீனா ஒரு நர்சிங் கல்லூரியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
ராஜ்குமாருக்கு டயர் பேக்டரியில் வேலை பார்க்கும் மற்றொரு பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது..
பின் பிரவீனாவின் உறவினர்கள் ராஜ்குமாரை கண்டித்து உள்ளனர்.., இரு குழந்தைகள் இருப்பதால் பிரவீனாவுடன் சேர்ந்து வாழும்படி கேட்டுள்ளனர்.., ஒரு பக்கம் சரி என சொல்லிவிட்டு மீண்டும் அந்த கள்ள காதலியையே தேடி சென்றுள்ளார்.., ராஜ்குமார்..
கடந்த வாரம் சனிக்கிழமை முதல் தொடர்ந்து நான்கு நாட்கள் குழந்தைகளுக்கு விடுமுறை என்பதால்.., குழந்தைகள் பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளனர், பின் இரவு வேலைக்கு சென்ற ராஜ்குமார்., பிரவீனா விடம் நீ வீட்டில் தனியாக இருக்காதே நான் உன்னை உன் உறவினர் வீட்டில் விட்டு விடுகிறேன் என அழைத்து சென்றுள்ளார்..
இதனை நம்பி அப்பாவி பிரவீனாவும் சென்றுள்ளார்.., இருவரும் பைக்கில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நான்கு மர்ம நபர்கள் இருவரையும் தாக்கி பிரவீனாவை கொலை செய்து வீசியுள்ளனர்.
பின் ராஜ்குமார் இது பற்றி உறவினரிடன் போன் செய்து தெரிவித்துள்ளார்.., போலீசாருக்கும் இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது.., சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் ராஜ்குமாரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்..
அங்கு வந்த மர்ம நபர்கள் நகையை திருடவில்லை.., போன் எதுவும் பறித்து செல்லவில்லை பின் பெண்ணை மட்டும் கொலை செய்தது எப்படி என சந்தேகத்தின் பெயரில் விசாரணையை தொடங்கினர்..
பின் பிரவினாவின் உறவினர்களிடம் இதுபற்றி விசாரித்த போது ராஜ்குமார் கள்ள காதல் பற்றி கூறியுள்ளனர்.., பின் ராஜ்குமாரிடம் விசாரணை செய்த போது அவரே செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்..
கள்ளகாதலின் மீது உள்ள மோகத்தால் மனைவியை கொலை செய்து விட்டதாகவும்.., அவர் தெரிவித்துள்ளார்.. தற்போது ராஜ்குமார் சிகிச்சை பிரிவில் இருப்பதால்.., சிகிச்சை முடிந்தவுடன் அவரை சிறையில் அடைத்துவிடுவோம் என போலீசார் தெரிவித்துள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..