அதிமுகவிற்கு துரோகம் செய்தால் நடுத்தெரு தான்..!! ஓ.பி.எஸ்ஸை விமர்சனம் செய்த ஆர்.பி. உதயகுமார்..!!
ஜெயலலிதாவின் விசுவாசியான ஓபிஎஸ் கடந்த 3 முறை தமிழக முதலமைச்சராக பதவி வகித்தார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் என அரசியல், அதிகார உச்சத்தில் இருந்த ஓபிஎஸ். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின் அவரது நிலை நாளுக்கு நாள் கீழிறங்கி, ராமநாதபுரத்தில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடும் அளவிற்கு அவரின் நிலை மாறிவிட்டது. இது ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை அடைந்ததை தொடர்ந்து 2016-ல் ஜெயலலிதா மரணடைந்த போது ஓ.பன்னீர்செல்வமே முதலமைச்சர் ஆனார். பின் எடப்பாடியுடன் இணைந்து துணை முதல்வர் ஆனார். துணை முதல்வரான பின் தனது செல்வாக்கை பயன்டுத்தி டி.டி.வி.தினகரன் மற்றும் சசிகலாவை மீது எதிர்ப்பை தெரிவித்தார். அதன் பின் அவர் மீது சொத்துகுவிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த மோதல் 2021 சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வதில் வெளிச்சத்துக்கு வந்தது. அதன் பின் பிரதமர் மோடியுடன் பிணைப்பில் இருந்த அவர் தோல்வியடைந்தார். இதனால் ஓபிஎஸ் எடப்பாடியிடையே சண்டை ஏற்பட்டு அவரவர் தரப்பில் குற்றசாட்டுகளை முன்வைத்தனர்.
அதிமுக பழனிசாமியிடம் முழு பொறுப்பும் வந்ததால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுகவை விட்டு வெளியேறினர். அதன்பின் டிடிவியுடன் ஓபிஎஸ் இணைந்து சசிகலாவுடன் இணையும் முயற்சியில் தோல்வி அடைந்து அதன்பின் பாஜகவின் ஆதரவாளராக மாறினார். இங்காவது இவரை மதிப்பார்களா என்ற நிலைக்கும் ஓபிஎஸ் தள்ளப்பட்டுள்ளார்.
ஆனால் அதற்கு நேர் மாறாக பிரதமர்மோடி பங்கேற்ற பிரச்சார மேடைகளில் கூட்டணி பேச்சு, தொகுதி பங்கீடு என எதிலும் ஓபிஎஸ்க்கு பாஜக முன்னுரிமை அளிக்கவில்லை. இதனால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மட்டுமின்றி ஓபிஎஸ்க்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மக்களவைத் தேர்தலில் போட்டியிடவே முடியாத சூழல் உருவாகிவிடுமோ என நினைத்த ஓபிஎஸ் ராமநாதபுரம் தொகுதியில் பாஜக ஆதரவுடன் சுயேச்சையாக களம் காணப்போவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி.உதயகுமார் உசிலம் பட்டியில் நடந்த கூட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது ஓ.பன்னீர்செல்வம் அவர்களை விமர்சனம் செய்து பேசியுள்ளார்.
அதில் அவர் பேசியதாவது, ஒ.பி.எஸ். மூன்று முறை முதல்வராக இருந்துள்ளார். இருந்தும் என்ன பலன் இன்னும் அவருக்கு கட்சியின் வேட்டியை கூட கட்ட தெரியல, ஜெயலலிதா அம்மாவின் ஆன்மா அவரை சும்மா விடாது. இந்த தேர்தல் முடிந்த பின் அவரை அரசியலை விட்டே போகும் நிலைக்கு தள்ளிவிடும்.
தாய்மார்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் நிதிஉதவி அதிமுகவின் தேர்தல் அறிக்கை தற்போது இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. நீங்கள் அதே அறிக்கையை பேசி வாக்கு வாங்க நினைத்தீர்கள் ஆனா எந்த உங்கள் வாக்குறுதி பற்றி பேசப்படவில்லை. ஏனென்றால் பொய்யான வாக்குறுதிகளை மக்கள் நம்ப போவதில்லை.
ஒ.பி.எஸ். மூன்று முறை முதல்வராக இருந்த என பெருமை பேசுகிறார். ஆனால் இன்று கட்சியின் வேட்டியை கூட கட்ட தெரியவில்லை, தாம் எந்த கட்சிக்கு வேலை பார்க்கிறோம் என்று தெரியாத அளவிற்கு அவர் நிலை மாறிவிட்டது. ஓபிஎஸ் ஜெயலலிதாவிற்கு என்ன துரோகம் செய்துள்ளார் என யோசித்து பார்த்தால் அவருக்கு புறிந்து விடும் சென்னை அப்பலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அவர்களை அனுமதித்திருந்த போது எட்டிக்கூட பார்க்காத ஓபிஎஸ், அம்மா இறந்தபின் முதல்வர் ஆனார்.
முதல்வர் அவருக்கு எப்படி கிடைத்தது :
அந்த முதல்வர் அவருக்கு எப்படி கிடைத்தது என்று அவருக்கு தான் தெரியும். எங்க இப்போ அவரை தேர்தலை நிக்க சொல்லி ஜெயிக்க சொல்லுங்க பாப்போம் டெபாசிட் கூட வாங்க மாட்டாரு. அதிகாரத்தை கையில் வைத்திருந்த சிலர் நினைத்திருந்தால் ஜெயலலிதா அவர்களை வெளிநாட்டிற்கு அழைத்து சென்று காப்பாற்றி இருக்கலாம்.
ஆனால் காப்பாற்றவில்லை ஏன்..? எல்லாம் சுயநலம். இப்படி சுயநலம் பிடித்த ஓபிஎஸ் இப்போ மவுன சாமியார் ஆகி விட்டார். அதனால் தான் அவருக்கு இந்தநிலை, இதற்கு முன் அம்மாவின் கட்சியில் இருந்தவரை ஒபிஎஸ்க்கு இந்த நிலை கிடையாது. ஆனா இப்போ வீதியில் நின்று ஒரே ஒரு சீட்டுக்காக நிற்கிறார். இரட்டை இலை சின்னத்திற்காக அது வேண்டும், இது வேண்டும் என கேட்கிறார்.
அம்மாவின் உயிர் பறிபோக ஓபிஎஸ் கூட்டம் தான் காரணம் அம்மாவின் ஆன்மா அவரை பார்த்து கொண்டு தான் இருக்கிறது. இந்த தேர்தல் முடிவில் எங்களுக்கு வெற்றி ஒபிஎஸ்க்கு வெட்டி வேர். ஜெயலலிதாவின் ஆன்மா ஓபிஎஸ்சை வஞ்சித்து கொண்டு இருக்கிறது.
அமைச்சர் மூர்த்திக்கு பயம் வந்துவிட்டது. இந்த தேர்தலில் தோற்றால் அமைச்சர் பதவியையும், மாவட்ட செயலாளர் பதவியையும், ராஜினாமா செய்வேன் என சொல்லி இருக்கிறார். பத்திரிக்கை நண்பர்களே நீங்கள் பார்த்துகொள்ளுங்கள் பின்னாடி இவங்க மாற்றி பேசுவாங்க. என ஓ.பன்னீர்செல்வத்தை விமர்சித்து இவ்வாறே ஜிகே வாசன் பேசியுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..