“நட்பின் தொடக்கமும்” இணைபிரியா நண்பர்களும்..!!
ஊர்ல நாலு பிரண்ட்ஸ் இருக்காங்க அந்த நாலு பேரும் ரொம்ப நெருங்கிய தோழிகளாம் அபிநயா., கண்மணி., செவ்வந்தி., தேன்மொழி இவங்க நாலு பேரும் ஒரே ஊரு அது மட்டும் இல்லாம அவங்க நாலு பேரு சின்ன வயசுல இருந்து ஒண்ணாவே தான் படிச்சிட்டு இருந்தாங்க..
ஒரே பள்ளியில் மட்டும் இல்லாம ஒரே வகுப்பறையிலும் அப்படியே அவங்களோட பள்ளி கால வந்து ரொம்ப சந்தோசமா போயிட்டு இருந்தது பள்ளிக்குப் போயிட்டு வரும்போது சந்தோஷமா போயிட்டு இருப்பாங்க.. அப்புறம் அவங்களோட கல்லூரி காலம் வந்துருச்சு.. அவங்க நாலு பேரும் ஒரே காலேஜ்ல சீட்டு போட்டாங்க காலேஜ்ல சீட்டு கிடைச்சிருச்சு ஆனா ஒரே வகுப்பறை கிடைக்கல.. சரி ஒரே வகுப்பறையில் இல்லனாலும் பரவால்ல ஒரே கல்லூரியில் இருக்கும் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் அப்படின்னு இருக்காங்க
நட்பில் வரும் சிறு சிறு சண்டைகள்., அதில் வரும் சமாதானம்., என எல்லாமே ரொம்ப அழகா போயிட்டு இருந்த காலம் அது.. தொடக்கம்னு ஒன்னு இருந்தா முடிவுன்னு ஒன்னு இருக்க தானே செய்யும்.. அது மாதிரி இவங்க வாழ்க்கையும் அந்த கல்லூரி வாழ்க்கை முடிந்தது.. 3 வருட கல்லூரி வாழ்கையில., கேலி., கிண்டல் சந்தோஷத்தை மட்டுமே பார்த்துட்டு இருந்த பொண்ணுங்க வாழ்க்கையில் இடி விழுந்தா மாதிரி அந்த செய்தி வந்துச்சு..
அந்த இடி விழுறா மாதிரி வந்த செய்தி என்ன அப்படின்னு நான் அடுத்த கதையில சொல்லுறன்…
– கௌசல்யா
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..