மாற்றி யோசித்தால் எல்லாம் வெற்றி..!! 15 வயது சிறுவனின் கண்டுபிடிப்பு..!! குவியும் பாராட்டு..!!
நமது வாழ்வில் எவ்வளவு பெரிய பிரச்சனைக்கும் கொஞ்சம் மாற்றி யோசித்தால் கண்டிப்பாக தீர்வு உறுதி என்பது இந்த மாணவரின் கண்டுபிடிப்பே ஒரு உதாரணமாகும்.
சேலம் அருகே ராமநாயக்கன் பாளையத்தில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவன் அபிஷேக், சாதாரண சைக்கிளில் 30.கி.மீ வேகத்திறன் கொண்ட பேட்டரியை பொருத்தியிருக்கிறார். தினமும் பள்ளிக்கு செல்ல 45 நிமிடங்களுக்கு மேல் ஆன பயண நேரம் தற்போது வெறும் 15 நிமிடமாக குறைந்துள்ளது.
சிறுவர்கள் பலருக்கும் பைக் ஓட்ட ஆசை இருக்கும். ஆனால் பைக் ஓட்ட 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும் என்பதால் பள்ளி மாணவர் ஒருவர், சைக்கிளில் சின்ன ஒரு மாற்றம் செய்துள்ளார். இதன் மூலம் 45 நிமிட பயண தூரம் வெறும் 15 நிமிடமாக குறைந்துள்ளதாக தெரிவித்தார்.
இதை தொடர்ந்து சேலம் ராமநாயக்கன் பாளையத்தில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவன் அபிஷேக் இதுபற்றி பேசுகையில் “என்னுடைய பள்ளிக்கு செல்ல வீட்டில் இருந்து 15 கிலோ மீட்டர் தினமும் பயணிக்க வேண்டும். இதனால் அப்பாவிடம் நான் மோட்டார் சைக்கிள் வாங்கித்தருமாறு கேட்டேன்.. அரசின் விதிமுறைப்படி 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் பைக் ஓட்டக்கூடாது என்பதை அறிந்து நான் சைக்கிள் வாங்கினேன் என்று பேசியுள்ளார்.
அந்த சிறுவன் எப்படி தாயாரித்தான் என்பதை ஒரு சிறு தொகுப்பு பார்க்கலாம். அந்த சிறுவன் வீட்டில் மோட்டார் வேலை செய்யும் போது அருகில் அமர்ந்து தினமும் பார்த்தாக தெரிகிறது. ஒரு நாள் அவனுக்கு திடிரென நாம் ஏன் ஒரு எலக்ட்ரிக் சைக்கிள் தயாரிக்கக்கூடாது என்று யோசித்தான்.
அதன்பிறகு அந்த மாணவன் சைக்கிளை தயாரித்தான். இப்போது இருசக்கர வாகனத்தை தயாரித்த பின்னர், தினமும் பள்ளிக்கு சென்று வரும் நேரம் குறைந்து விட்டதாக தெரிவித்தார். அதேபோல் இந்த சைக்கிளில் பயன்படுத்தியுள்ள மோட்டார் 2800 ஆர்பிஎம், 24 வோல்டு, 250 வாட்ஸ் பயன்படுத்தி இருக்கிறார்.
மேலும் பழைய சைக்கிளை தான் இப்படி பேட்டரி சைக்கிளாக தயாரித்துள்ளான்.
இதனை 3 மணி நேரம் சார்ஜ் போட்டால் 30 கிலோ மீட்டர் பயணிக்க முடியும் என்றும் இதற்கு ஒரு நாள் செலவு என்று பார்த்தால் வெறும் ஒரு ரூபாயில் முடித்துவிடலாம் என தெரிவித்தார்.
இதனால் பெட்ரோல் பைக்குடன் இதனை ஒப்பிட்டு பார்த்தால் எலக்ட்ரிக் சைக்கிள் பயனுள்ளதாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.
– கவிப்பிரியா
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..