அயோத்தி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை..! “டிஎன்ஏ டெஸ்ட் செய்ய சொன்ன அகிலேஷ் யாதவ்..! வெடித்த அடுத்த சர்ச்சை..!
உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியை சேர்ந்த 12 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சிறுமி கர்ப்பமாகப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையாக வெடிக்க தொடங்கியது..
அதன் பின் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளாததால்.., சிறுமியின் பெற்றோர் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து அயோத்தி போலீசார், கடந்த ஜூலை 30ம் தேதி அன்று அதே பகுதியில் பேக்கரி நடத்தி வரும் இருவரை கைது செய்தனர்.
மேலும், அந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் “மொய்த் கான் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது, அரசியல் வட்டாரங்களில் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் உ.பியில் ஆளும் கட்சியான பாஜக மற்றும் பகுஜன் சமாஜ் வாதி கட்சி ஆகியவை சமாஜ்வாதி கட்சி மீது கடும் விமர்சனங்களை முன் வைத்தது.
அகிலேஷ் யாதவ் சர்ச்சை பேச்சு :
பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனங்களை எழுப்பியதும்.., செய்தியாளர்களை சந்தித்து பேசிய உபி எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகியுள்ளவர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை எடுங்கள் அதில் பாசிட்டிவ் என வந்தால் பார்க்கலாம் என அகிலேஷ் யாதவ் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது..
மேலும் அவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள வழக்கில் வெறும் குற்றச்சாட்டுகளை மட்டும் முன்வைத்து அரசியல் செய்ய வேண்டும்.., குற்றம் சாட்டப்பட்டதாக சொல்லப்படும் அனைவருக்கும் டிஎன்ஏ பரிசோதனை செய்து நீதி வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு உடனடியாக ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். சம்பவத்தை விசாரிக்காமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சமாஜ்வாதி கட்சி மீது குற்றச்சாட்டுகளை வைக்கக்கூடாது. டிஎன்ஏ சோதனைக்குப் பிறகு குற்றச்சாட்டுகள் பொய் என்று நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளையும் தப்ப விடக்கூடாது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
அகிலேஷ் யாதவின் இந்த பேச்சுக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யாநாத், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோர் கடுமையாக விமர்சித்துள்ளதுள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..