புனித பரலோகமாதா பேராலய பவனி பெருவிழா தேதி அறிவிப்பு..!
புகழ்பெற்ற காமநாயக்கன்பட்டி புனித பரலோகமாதா பேராலய விண்ணேற்பு பெருவிழா 6ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 15ம் தேதி தேரடித் திருப்பலியும், நற்கருணை பவனியும் நடக்கிறது..
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டியில் புனித பரலோக மாதா பேராலயம் உள்ளது 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பேராலயம் கடந்த ஆண்டு தான் திருத்தலத்தில் இருந்து பேராலயமாக உயர்த்தப்பட்டது. மேலும் இந்த பேராலயத்தில் வீரமாமுனிவர் பங்கு தந்தையாகவும் பணியாற்றியுள்ளார் . இதனை தொடர்ந்து ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் விண்ணேற்பு பெருவிழா மிகவும் புகழ்பெற்ற திருவிழாவாகும்.
இதில் தமிழக மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து பிரார்த்தனை செய்வது வழக்கம். இத நிலையில் இந்த ஆண்டுக்கான திருவிழா வரும் 6ந்தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.மேலும் திருத்தலத்தில் இருந்து பேராலயமாக உயர்த்தப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் விண்ணேற்பு பெருவிழா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விண்ணேற்பு பெருவிழா ஏற்பாடுகள் குறித்து காமநாயக்கன்பட்டியில் பேராலய அதிபர் மற்றும் பங்கு தந்தையான அந்தோணிசாமி குரூஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில் திருத்தல விண்ணேற்பு பெருவிழா இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது. மேலும் விழாவிற்கு வரும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் அரசுத்துறைகளுடன் இணைந்து செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார். கொடியேற்றம் மற்றும் பெருவிழாவையொட்டி கோவில்பட்டி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..