3 புதிய குற்றவியல் சட்டங்கள்..! ஜாக் கூட்டமைப்பு தேதி அறிவிப்பு..!
3 புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு ஜாக் கூட்டமைப்பு அறிவிப்பு.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள வழக்கறிஞர்களின் சங்கங்களின் கூட்டுக் குழுவான ஜாக் பொதுக்குழு கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த அனைத்து மாவட்டங்களிலிருந்தும் வழக்கறிஞர் சங்கங்கள் சார்பில் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர். இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்ட முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பின் தலைவர் நந்தகுமார்
மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து போராடிய வழக்கறிஞர்களின் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்து ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை நீதிமன்றத்திற்கு, பணிக்குச் செல்ல உள்ளதாகவும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பின்னர் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக் கூட்டமைப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும்,மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு நிறுத்தி வைத்து திரும்ப பெற வேண்டு மென வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் தமிழக சட்டப்பேரவையில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி மூன்று புதிய சட்டங்களை நிறுத்தி வைக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமெனவும் இக்கூட்டத்தில் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..