முகத்தில் வழியும் எண்ணெய் பசைக்கு இதை ட்ரைப் பண்ணுங்க…
* அடிக்கடி முகத்தை கழுவ வேண்டும். மேற்க்கொண்டு முகத்தில் எண்ணெய் வழியும் போதெல்லாம் காட்டன் துணியை கொண்டு துடைத்து எடுக்கவும். முகத்திற்கு சோப்பு போட்டு குளிப்பதற்கு பதிலாக கடலை மாவு, பாசிப்பயிறுமாவு போட்டு தேய்த்து கழுவி வந்தால் முகம் பொலிவு அடையும்.
* எண்ணெய் பலகாரங்களை தவிர்த்து விடுங்கள். அன்றாடம் ஒரு கேரட் வீதம் சாப்பிட்டால் முகத்தில் எண்ணெய் பசை குறையும். பீட்ரூட் மற்றும் தக்காளி சாறு குடிப்பது சருமத்திற்கு ரொம்ப நல்லது.
* தக்காளியை இரண்டாக நறுக்கி எடுத்து ஒரு பாதியை சர்க்கரையில் தேய்த்து முகத்தில் தேய்க்கவும். அப்பறம் மற்றொரு பாதியை கஸ்தூரி மஞ்சளில் தேய்த்து அதையும் முகத்தில் தடவி காயவிட்டு 10 நிமிடம் கழித்து முகத்தை அலசவேண்டும்.
* துளசி, வேப்பிலை, புதினா மற்றும் கொஞ்சம் தயிர் சேர்த்து மிக்சி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். முகத்தை சுத்தம் செய்து துணியால் துடைத்தெடுத்து இந்த் பேக்கை தடவி அரை மணி நேரம் கழித்து காய்ந்ததும் கழுவி விட வேண்டும் . இதை தொடர்ந்து பயன்படுத்தி வர கருமை படை குறைந்து முகம் பொலிவாகவும் எண்ணெய் பசையும் குறையும்.