முத்துப்பாண்டியா..? வேலுவா..? திரிஷா சொன்னது..? சொல்லி அடிச்ச கில்லி..!! வசூல் எவ்ளோ தெரியுமா..?
இளைய தளபதி விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் நடிப்பில் இயக்குனர் தரணியின் தயாரிப்பில் ஏப்ரல் 17ம் தேதி 2004ம் ஆண்டு வெளிவந்த படம் தான் “கில்லி” தளபதி விஜய் படம் என்றாலே அது ரசிகர்களுக்கு கொண்டாட்டம் என சொல்லலாம்..
அப்படி இருக்கும் போது 2004ம் ஆண்டு வெளிவந்த போது 100 நாட்களுக்கு மேல் திரையரங்கு களில் வெற்றிகரமாக ஓடி 32கோடி வசூல் செய்து சாதனை படைத்தது..,
நாளைய தீர்ப்பில் தொடங்கிய நம்ப தளபதியின் சினிமா பயணம் அவரின் முதல் படம் தோல்வியை கொடுத்தது ஆனால் அவரின் 9வது படமான பூவே உனக்காக 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.
இந்த படம் தான் இவரின் முதல் வெற்றி படம் என சொல்லலாம் அதன் பின் அவருக்கு அடுத்தடுத்து நிறைய படங்கள் வெற்றி பெற்றது.. ரசிகர்கள் பட்டாளமும் அதிகரித்தது..
அதன்பின் விஜய், தேவயானி, ரம்பா நடிப்பில் வெளியான நினைத்தேன் வந்தாய் படம் 100 நாட்கள் ஓடி சாதனை பெற்றது.., இந்த படங்கள் மட்டுமல்ல அதன் பின் வந்த படங்களும் வெற்றி வரிசையில் நிற்கிறது..
இதையெல்லாம் முறி அடிக்கும் விதமாக 2004ம் ஆண்டு வெளி வந்த கில்லி படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி தமிழ்நாட்டில் மட்டும் 32கோடி வசூல் சாதனை படைத்தது.., இந்த படம் தான் தளபதியின் விஜய் சினிமா வாழ்க்கையில் வசூல் செய்த படம் என சொல்லலாம்..
அப்பாவுக்கு பிடிக்காத விஷயத்தை செய்யுறது அந்த காலத்துல இருந்தே நம்ப பசங்களுக்கு இருக்க ஒன்னுன்னு சொல்லலாம்.., அதை தான் நமப தளபதியும் பண்ணியிருக்காரு.., அப்பாவுக்கு பிடிக்காத கபடி விளையாட்டை விளையாடுறதுக்காக மதுரைக்கு வர நம்ப வேலு..,
முத்துபாண்டி தனலக்ஷ்மியை இழுத்துட்டு போறத பாத்துட்டு முத்துபாண்டியை அடிச்சு போட்டு நம்ப தனலட்சுமியை தூக்கிட்டு போவாரு.. அந்த காட்சி எல்லாம் இப்போ வரைக்கும் ரசிகர்களுக்கு பிடித்த ஒன்னுன்னு சொல்லலாம்.
எல்லாம் படத்துலையும் ஹீரோ காதலிக்கிற பொண்ண தான் வில்லன் காதலிப்பாரு ஆனா இந்த படத்துல தான் நம்ப வில்லன் காதலிச்ச பொண்ண தான் நம்ப ஹீரோ கூட்டிட்டு வருவாரு..
தான் காதலிச்ச பொண்ணு கழுத்துல இன்னொருத்தன் கத்திய வெச்சான் தெரிஞ்சதும் துடிக்குற இவரோட மனசு இருக்கே .., அது தாங்க காதல்.., அதுலயும் நம்ப முத்து பாண்டி சொல்லும் இந்த வசனம் “ஹாய் செல்லம்.. ஐ லவ் யூ” என்ற வசனம் இப்போ வரைக்கும் ஹிட்னு சொல்லலாம்.
அர்ஜுனரு வில்லு என்ற பாடல் இப்போ வரைக்கு டிராவல் டைம்ல யாரு கேட்டாலும் ஒரு பூஸ்ட் அப் பாடல் என சொல்லலாம்..
அதை விட இன்றய 2கே கிட்ஸ் ஆன்ட்ராய்டு போன்ல கேட்குற பாடல் விட அந்த கால 90ஸ் கிட்ஸ்க்கு மட்டும் தான் தெரியும் இந்த பாட்டோட அருமை “அப்படி போடு…, போடு” பாடல் திருவிழாக்களில் விற்கப்படும் இந்த விளையாட்டு போனில் ஒலிக்கும் இந்த பாடல் படத்தை விட பேமஸ் என சொல்லலாம்..
ஒவ்வொரு பெண்ணின் மனதிலும் ஏற்படும் காதல் தோல்வியை வெளிப்படுத்தும் விதமாக வந்தது தான் இந்த பாடல் “காதலா காதலா காதலை சொல்லடா, மெளனமாய் கொள்வது நல்ல தள்ளடா“
இப்படி ஒரு படத்தில் பாடல்கள், காமெடி, வசனம், என அனைத்தும் ஹிட் அடித்தால் யாருக்கு தான் இந்த படம் பிடிக்காது.., அதனால் தான் என்னவோ இந்த முறை ரீரிலீஸ் செய்தாலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் இந்த படம் ரீரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
ரீ ரிலீஸ் செய்யப்பட்ட படங்களில் இந்த படம் தான் முதல் முறையாக தமிழ்நாடு முழுவதும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.., இன்று காலை கட்சி திரையிடப்ப்பட்டு திரையில் வெற்றிக்கரமாக ஓடி கொண்டு இருக்கிறது.., தற்போது வரை கிடைத்த தகவலின் படி படத்தின் வசூல் பற்றி திரையரங்கு உரிமையாளர்கள் வெளியிடவில்லை ஆனால் 50 கோடியை தாண்டும் என திரையங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..