மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு சந்திராஷ்டமம் என்பதால் எதிலும் அவசரம் வேண்டாம். கோபப்படுவதை குறைத்துக் கொள்ள வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடும். குடும்பத்தினருடன் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். சிலருக்கு கடன் வாங்கும் நிலை ஏற்படும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு பெரியவர்களின் ஆசிகள் கிடைக்கும். தாராளமான பொருள் வரவு இருக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். கொடுக்கல் – வாங்கல்களில் இருந்த பிரச்சனை தீரும். வெளிநாடு செல்லும் யோகம் பெறுவார்கள்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு புதிய மனிதர்களின் அறிமுகத்தால் நன்மை ஏற்படும். உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வாங்கிய கடனை அடைத்து முடிப்பீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரங்களில் நல்ல லாபம் இருக்கும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு மதிப்பும், மரியாதையும் பெருகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். குடும்பத்திற்கு தேவையானவற்றை வாங்குவீர்கள். தம்பதிகளிடையே ஒற்றுமை கூடும். தொழில், வியாபாரங்களில் கூட்டாளிகளால் லாபம் ஏற்படும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த பொருள் வரவு இருக்கும். பெண்களுக்கு ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு பெறுவார்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயங்கள் இருக்கும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு சிறந்த வாய்ப்புகள் அமையும். புதிய மனிதர்கள் உதவுவார்கள். இழுபறியாக இருந்த பணத்தொகை வந்து சேரும். உறவினர்கள் வழியில் சிலருக்கு செலவுகள் ஏற்படும். ஆன்மீக தலங்களுக்கு குடும்பத்துடன் செல்வீர்கள்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு பரபரப்பாக செயல்படுவார்கள். வியாபார ரீதியிலான பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் இருக்கும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு தினம் எதிர்பாராத தன வரவு இருக்கும். பெரிய மனிதர்களின் உதவிகள் கிடைக்கும். சிலர் புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் பெறுவார்கள். சொத்து விவகாரங்களில் இழுபறிக்குப் பிறகு வெற்றி கிடைக்கும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு புதிய முயற்சிகள் கைகூடும். நண்பர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் தீரும். பணியிடங்களில் சக தொழிலாளர்கள் உதவுவார்கள். வாகனங்கள் வழியில் சிலருக்கு செலவுகள் ஏற்படலாம். சராசரியான பொருள் வரவு இருக்கும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். தொழில், வியாபாரங்களில் இருந்த தடைகள் நீங்கும். தாய் வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படும், மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். நண்பர்களால் பணவரவு உண்டாகும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு சிந்தனைகள் சிறக்கும். எதிரிகள் விலகுவார்கள். தொழில், வியாபாரங்களில் சிறந்த முன்னேற்றங்கள் இருக்கும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த தகவல் கிடைக்கும். பிரிந்து சென்ற உறவினர் உங்களைத் தேடி வருவர்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு மனக்குழப்பங்கள் தீரும். பொருளாதாரம் முன்னேற்றங்கள் இருக்கும். குழந்தைகள் வழியில் சிலருக்கு செலவுகள் ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சமூகமாக தீரும்.