வரலட்சுமி விரதம் ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை அன்று அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு வரலட்சுமி விரதம் இன்று 25 ஆகஸ்ட் 2023 வருகிறது. செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியை மகிழ்விக்க வரலட்சுமி விரதம் அனுசரிக்கப்படுகிறது. வரலட்சுமி நோன்பு என்பது பதினாறு வகைச் செல்வத்துக்கும் அதிபதியான லட்சுமியின் அருள் வேண்டி இந்துக்களின் நோன்பாகும். வரலட்சுமி நோன்பை கடைபிடித்தவர்கள் பெரும் பயனை அடைந்தார்கள் என்று பத்ம புராணம் கூறுகிறது.
திருமகளான லட்சுமி நம் இல்லத்திற்கு எழுந்தருளி கொலுவிருப்பதால் வரலட்சுமி பண்டிகை கொண்டாடுகிறோம். இந்த விரதம் மற்றும் வழிபாட்டின் மூலம், லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தைப் பெற்று, செல்வம், பெருமை, குழந்தை, மகிழ்ச்சி மற்றும் அதிர்ஷ்டம் ஆகியவற்றைப் பெறுகிறார். இந்த விழா தென்னிந்திய மாநிலங்களில் முக்கியமாக கொண்டாடப்படுகிறது. வரலட்சுமி விரத நாளில்,பெண்கள் கணவர், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காக நாள் முழுவதும் விரதமிருந்து லட்சுமி தேவியை வழிபடுவார்கள். அத்தகைய சூழ்நிலையில், வரலட்சுமி விரதத்தின் மங்களகரமான நேரம் மற்றும் வழிபாட்டு முறை குறித்து இங்கு பார்க்கலாம்.
வரலட்சுமி விரத பூஜைக்கு தேவையான பொருட்கள்:
சின்ன வாழைக்கன்று இரண்டு
தோரணம் (கிடைத்தால்)
மாவிலை தோரணத்திற்கு.
முகம் பார்க்கும் கண்ணாடி (அம்மனின் பின் அலங்காரத்தை ரசிக்க)
பூச்சரம் அம்மன் அலங்காரத்திற்கு
அம்பாளை வைக்க சொம்பு.
காதோலை இரண்டு பக்கமும் வைக்க
கருக வளையல் இரண்டு பக்கமும் வைக்க
மாவிலைக்கொத்து, தேங்காய் மற்றும் அம்மன் வைக்க
தாழம்பூ
சிறிய வாழை இலை. அதில் அரிசியை பரப்பி, அம்மனை வைக்க
புதிய ரவிக்கை துண்டு (அம்மனுக்கு சாத்த)