குழந்தையை பிரிந்து வேலைக்கு செல்லும் பெண்கள் கவனத்திற்கு..!!
குழந்தை பிறந்ததும் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமை, வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மகப்பேறு விடுமுறை காலம் என்று 6மாதம் கொடுப்பார்கள்.
குழந்தைகள் அந்த ஆறு மாதத்தில் தாயோடு மிகவும் நெருங்கி விடுவார்கள், எல்லாம் குழந்தைகளுக்கும் ஆறாவது மாத்தில் இருந்து நபர்களை அடையாளம் காண தொடங்கி விடுவார்கள்.
எனவே அம்மாக்கள் ஆறுமாதம் முடிந்த பின் வேலைக்கு செல்லும் பொழுது, குழந்தைகள் தாயின் அன்பிற்கு எங்க தொடங்கி விடுவார்கள்.
இதனால் அவர்களுக்கு தனிமை உணர்வும், பதற்றமும் கூடி விடும், வேலை முடிந்த பின் தாய், சேயோடு உறவாடும் பொழுது மகிழ்ச்சியாக இருப்பார்கள். மீண்டும் தாயின் அன்பு கிடைத்து விட்டது என்ற சந்தோஷத்தை புன்னகையிலே வெளிப்படுத்துவார்கள்.
மீண்டும் மறுநாள் வேலைக்கு சென்று விட்டபின் ஏக்கம் அதிகமாகி விடும், சில குழந்தைகள் அதை அழுகையில் சொல்லி விடுவார்கள். ஒரு சில குழந்தைகள் மனதிற்குள்ளேயே வைத்து.. எங்கு வார்கள். இவை இரண்டுமே ஆபத்தானது தான்.
இதை தடுக்க குழந்தை களுக்கு ஆரம்பத்தில் இருந்து தாயின் அரவணைப்போடு, சுற்றி இருக்கும் உறவினர் ஒருவரின் அன்பும் அரவணைப்பும் கொடுக்க வேண்டும், அவர்களோடு அதிக நேரம் செல விட வேண்டும்.
அதாவது குழந்தையின், பாட்டி, சித்தி, அத்தை யாராவது ஒருவராக இருக்கலாம். திருமணம் ஆனா பின் முதல் குழந்தைக்கான பிரசவத்தை அம்மா வீட்டில் பார்ப்பது வழக்கம், அந்த ஆறுமாதத்தில் குழந்தைகள் அவர்களோடு அதிகம் ஒன்றி விடுவார்கள்.
ஆறு மாதத்திற்கு புகுந்த வீட்டிற்கு சென்ற பின், அங்கு இருப்பவர்களோடு பழக விருப்பம் கொள்ள மாட்டார்கள், அழுது கொண்டே இருப்பார்கள், இதை சரி செய்ய, குழந்தைகள் யாரிடம் அதிக பிரியத்துடன் இருக்கின்றார்களோ அவர்களிடம் வளர விட வேண்டும்.
அல்லது புதிய நபருடன் பழகி, அவர்களுடன் ஒன்றும் வரை தாய் உடன் இருக்க வேண்டும். இதை செய்ய மருத்தால், குழந்தைகள் மனதில் ஏக்கமும் பதட்டமும் அதிகம் ஆகி விடும். இதனால் மனதாலும் உடலாலும் அதிகம் பாதிக்கப் படுவார்கள்.
இந்த பிரச்சனை முதல் குழந்தைக்கு மட்டும் தான் ஏற்படும். இரண்டாவது குழந்தைக்கு இந்த பிரச்சனை ஏற்படாது. இரண்டு குழந்தைகளுக்கும் இடையே சுமார் 2 – 4 வருடமாவது இடைவெளி இருக்க வேண்டும்.
பிறக்கும் இரண்டாவது குழந்தையை, முதல் குழந்தை என்றும் அன்போடு பார்த்துக்கொள்ளும். இரண்டாவது குழந்தை ஏக்கம் இன்றி வளரும். சில சமயம் தாயின் அரவணைப்பை கூட அவர்கள் விரும்ப மாட்டார்கள்.
மேலும் இதுபோன்ற பல குழந்தை குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
-வெ.லோகேஸ்வரி.
Discussion about this post