கல்லூரி மாணவர்கள் மீண்டும் ரயிலில் பட்டாக்கத்தியுடன் பிளாட்பாரத்தில் தேய்த்தபடியே சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது தொடர்பாக இரண்டு மாணவர்களை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்
ஆவடியில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வரக்கூடிய மின்சார ரயிலில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கூட்டமாக ஏறி இருக்கிறார்கள். அப்பொழுது ரயிலின் படியில் தொங்கியபடியே பட்டாக்கத்தியை பிளாட்பாரத்தை தேய்த்தபடி நாங்கள் எல்லாம் பச்சயபாஸ் காலேஜ் எங்ககிட்ட வம்பு வச்சிக்காதிங்க என கோஷம் போட்டுக் கொண்டே சென்றுள்ளனர்.
இந்த தகவலின் அடிப்படையில் ரயில்வே பாதுகாப்பு படை காவலர் ஆவடி காவல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சரண்ராஜ் மற்றும் அபினேஷ் ஆகிய இரண்டு மாணவர்களை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.
Discussion about this post