கர்ப்பிணி பெண்கள் கவனத்திற்கு வெயிலில் இதை மட்டும் செய்ய வேண்டாம்..!!
கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவும்.., நோய் தொற்று அதிகமாகவும் இருக்கும். அதிலும் கர்ப்பிணி பெண்களுக்கு சிறுநீர் பாதை தொற்று அதிகமாக ஏற்படும் இவற்றை சரி செய்வதறகான சில குறிப்புகள் பற்றி பார்க்கலாம்.
* அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
* ஒரு நாளைக்கு 3 லிருந்து 4 லிட்டர் தண்ணீர் வரை குடிக்க வேண்டும்.
* போதுமான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்ள வில்லை என்றால், சிறுநீர் கழிக்கும் பொழுது அடிவயிற்றில் வலி, எரிச்சல் போன்ற உணர்வுகள் ஏற்படும்.
* அதிக நீர்ச்சத்துக்கள் நிறைந்த தர்பூசணி, திராட்சை, போன்ற பழங்கள் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
* கீரை வகைகள் மற்றும் மஞ்சள் பூசணிக்காய், போன்ற காய்கறிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
* சில சமயம் வெள்ளைப் படுதல் ஏற்பட்டாலோ அல்லது சிறுநீர் கழிக்கும் பொழுது வலி ஏற்பட்டாலோ அருகில் உள்ள மகப்பேறு மருத்துவரை உடனே அணுக வேண்டும்.
* வெயிலின் தாக்கம் அதிகம் என்பதால் காலை 11:00 மணிக்கு மேல் இருந்து மதியம் 3:00 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கலாம். கட்டாயம் செல்ல வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டால், குடிப்பதற்கு தண்ணீர் எடுத்துக்கொண்டு செல்வது சிறந்தது.
* காலை 7மணி முதல் 8 மணி வரை அல்லது மாலை 6 மணிக்கு மேல் நடைபயிற்சி மேற்க்கொள்ளலாம்.
மேலும் இதுபோன்ற பல பெண்கள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
-வெ.லோகேஸ்வரி
















