தாய்பால் கொடுக்கும் பெண்கள் கவனத்திற்கு..!! தவறுதலாக கூட இதை செய்து விடாதீர்கள்.
குழந்தை பிறந்த பின் குழந்தையை எப்படி கையாள வேண்டும் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும்.. முக்கியமாக தாய்ப்பால் கொடுக்கும் பொழுது. எந்த வகையான உணவுகளை எடுத்துக்கொண்டால் குழந்தைக்கு ஆரோக்கியமான தாய்ப்பால் கொடுக்க முடியும். எந்த வகையான உணவுகளை எடுத்துக்கொள்ள கூடாது என்று எல்லாம் இருக்கும்.
அதற்கான தீர்வு இதோ..!!
காபி : தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் காபி குடிக்காமல் இருப்பது நல்லது, காபியில் உள்ள காப்ஃபைன் தாய்ப்பால் சுரப்பில் இடையூறு ஏற்படுத்தும்.
இதனால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் பொழுது உடலுக்கு சென்று ஒரு வித எரிச்சலை ஏற்படுத்தி, குழந்தையின் தூக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தும்.
மாத்திரைகள் : தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பயன் படுத்தும் பொழுது மிக கவனமாக கொடுக்க வேண்டும்.
இதனால் தாய்ப்பால் குடிக்கும் பொழுது விளைவு ஏற்படுத்தாது, குழந்தைகள் வளர தொடங்கும் பொழுது விளைவுகள் ஏற்படுத்தும்.உடல் நலம் சரியில்லாத போது மருத்துவரை அணுகி, மருத்துவர் பரிந்துரை செய்யும் மாத்திரைகளை உபயோகிப்பது சிறந்தது.
பூண்டு : பூண்டின் வாசம் குழந்தைகளுக்கு பிடிக்காது, எனவே தாய்ப்பாலுடன் அவை செல்லும் பொழுது, அவர்களுக்கு தாய்ப்பால் குடிக்க பிடிக்காது.
அது மட்டுமின்றி குழந்தைகளுக்கு வயிற்று எரிச்சல், வயிற்று உப்பசம் போன்றவற்றை ஏற்படுத்தும்.
சீஸ் ( Cheese ) : சில குழந்தைகளுக்கு மாட்டு பாலில் தயார் செய்யப்பட்ட பொருட்கள் பிடிக்காது, இதனால் வயிற்று உப்பசம் ஏற்பட்டு, வாய்வு தொல்லை மட்டும் அடி வயிற்றில் வலியை ஏற்படுத்துகிறது.
எனவே தான் குழந்தை தொடர்ச்சியாக அழுது கொண்டே இருக்கிறது.
– வெ.லோகேஸ்வரி