பெண்களுக்கான தடகள போட்டி..!! வெள்ளிப்பதக்கம் தட்டி சென்ற மாணவி..!!
பெண்களுக்கான கேலோ இந்தியா மாநில அளவிலான தடகள போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மயிலாடுதுறை தனியார் பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டி பரிசுத்தொகை வழங்கி ஊக்குவித்தனர்.
மத்திய அரசு சார்பில் பெண்களுக்கான கேலோ இந்தியா மாநில அளவிலான தடகளப்போட்டிகள் சென்னை நேரு விளையாடடு அரங்கில் கடந்த 20 ஆம் தேதி நடைப்பெற்றது.
இதில் மயிலாடுதுறை குட்சமாரிட்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் தனுஷ்கா 1500மீ, 800மீ ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கமும், ஆபியா 1500மீ ஓட்டத்தில் வெண்கலப்பதக்கமும், அனுரெக்ஸி 200மீ ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கமும், 300மீ ஓட்டத்தில் வெண்கலப்பதக்கமும் வென்று பள்ளிக்கு பெருமை சேர்ததுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவிகளை நிர்வாகத்தினர் பாராட்டி பரிசுத்தொகை வழங்கி ஊக்குவித்தனர்.
Discussion about this post