புதுக்கோட்டை வெங்களபிடாரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது…
புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் பகுதியில் வெங்களபிடாரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தில் மன்னர் காலத்தில் இருந்து பாரம்பரியமிக்க வெங்கள பிடாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 18 ஆண்டுகளுக்கு பின்பு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கும்பாபிஷே விழாவை முன்னிட்டு மூன்று காலயாக பூஜைகள் செய்யப்பட்டு யாகசாலையில் இருந்து புனித நீரை வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக வந்து பின்னர் கோவிலின் கோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது.
இந்த கும்பாபிஷேக விழாவை காண்பதற்காக பல்வேறு இடங்களில் இருந்தும் திரளானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.