செயற்கை நகைகளை புதிதாக வைத்திருக்க இதை செய்தால் போதும்..!
தங்க நகைகளின் விலை ஏறி எங்கயோ போய்கொண்டிருக்கும் நிலையில் செயற்கை நகைகள் அவைகளின் குறைவான விலை மற்றும் டிசைங்களுக்காக பெண்கள் பலராலும் வாங்கப்படுகிறது.
அப்படி வாங்கிம் நகைகளை புத்தம் புதிது போல பாதுகாக்க சில வழிகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
உலர வைத்தல்:
செயற்கையான நகைகள் ஈரமாக இருந்தால் அதன் கலர் மங்கி விடும். எனவே இதன் மேல் படும் ஈரத்தை ஒரு காட்டன் துணியால் துடைத்து உலர வைக்க வேண்டும். மேலும் குளிக்கும்போது செயற்கையான நகைகள் அணிவதை தவிர்க்க வேண்டும்.
தனித்தனியாக வைக்கவும்:
செயற்கையான நகைகளை தனித்தனியாக ஒரு பையிலோ அல்லது நகைப் பெட்டியிலோ வைக்க வேண்டும். அப்போது தான் நிறமாற்றம் அடையாது சிதைவதையும் தடுக்கலாம். இப்படி பாதுகாத்தால் நகைகள் பல வருடங்களுக்கு புதிதாக பாதுகாக்கலாம்.
இரசாயனங்களை தவிர்த்தல்:
ஹேர் ஸ்பிரே, வாசனை திரவியம், சரும லோஷன்ஸ், வீடு சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் இரசாயனங்களை பயன்படுத்துவதற்கு முன்பாக நகைகளை கழட்டி வைக்க வேண்டும். காரணம் இரசாயனங்கள் பட்டு நகைகள் கருத்துவிடும்.
சூரிய ஒளியை தவிர்த்தல்:
செயற்கையாக தயாரித்த நகைகள் நேரடியான சூரிய ஒளியில் கருத்துப்போய்விடும் எனவே இவற்றை குளிர்ந்த இடத்தில் வைத்து பாதுகாக்க வேண்டும்.
கவனமான பாலிஷ்:
செயற்கை நகைகளை பிரகாசமாக பாதுகாக்க சாஃப்டான துணியை கொண்டு துடைக்கலாம். இரசாயனங்கள் நிறைந்த துணிகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
கவனமாக கையாளல்:
செயற்கை நகைகளை வாசனை திரவியங்கள், மேக்கப், ஹேர்ஸ்பிரே ஆகியவற்றை பயன்படுத்திய பிறகு கடைசியாக பயன்படுத்த வேண்டும். நகைகளை வளைக்கவோ உடைப்பதையோ தவிர்த்தல் வேண்டும்.
நகைகளை சரிபார்த்தல்:
நகைகளில் உடைந்த பாகம், கற்கள் ஆகியவற்றை பார்த்தால் உடனே அதனை சரிச்செய்து நகைகளின் ஆயுளை நீட்டிக்க வேண்டும்.
மேலே சொன்ன முறைகளை கையாளுவதன் மூலமாக நாம் வாங்கும் நகைகளை பாதுகாத்து பல வருடங்களுக்கு பயன்படுத்தலாம்.