ஜம்மு காஷ்மிரில் பயங்கரவாதிகள் தாக்குதல்..!! பாதுகாப்பு படை தீவிரம்..!!
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் நடத்தப்பட்ட தாக்குதலில்., மூன்று பேர் சுட்டுக் கொலை செயப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் 4 காவலர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது..
காஷ்மீரில் தொடர்ந்து பயங்கரவாதிகள் ஆச்சுறுத்தல் மற்றும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது..
இதனால் காஷ்மிர் முழுதும் பாதுகாப்புபடை மற்றும் இராணுவ வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்..
அப்படியாக நேற்று புத்கம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உ.பி.,யை சேர்ந்த இரண்டு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்..
உடம்பில் காயங்களுடன்., அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேபோல் ஸ்ரீநகரின் கன்யார் பகுதியில் பாதுகாப்பு படையினர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதற்கு பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்துள்ளனர்..
அதாவது, அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் படி பாதுகாப்பு படையினர்., பயங்கரவாதிகள் இருந்த இடத்திற்கு சென்று துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.. அந்த துப்பாக்கி சூட்டில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதேபோல் 4 காவலர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்…
தாக்குதலில் இருந்த பயங்கரவாதிகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டத்தில் ஒருவர் வெளிநாட்டை சேர்ந்தவர் என்பதும், மற்றொருவர் உள்ளூரைச் சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆனால் இறந்தவர்கள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவராததால்.., விசாரணை தீவிரமாக்கப்பட்டுள்ளது.. அதேபோல்
அந்த பகுதியில் வேறு யாரேனும் தங்கி உள்ளார்களா., என்பது குறித்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..