மூட்டுவலி பிரச்சனை உங்களை தூங்க விடலையா..? அப்போ இதை படிங்க முதல..!!
மூட்டு வலி வராமல் தடுக்க உதவும் தினசரி பழக்க வழக்கங்கள் மூட்டு வலி என்பது பல காரணங்களால் ஏற்படக்கூடியது. மூட்டு பகுதிகளில் ஏற்படும் அடி அதன் பொசிஷன் மாறுவது போன்ற காரணங்களினால் பலர் மூட்டு வலியில் அவதிப்படுகிறார்கள்.
இது போன்ற பாதிப்புகள் நம்மை வாக்கிங், ஜாக்கிங் உடற்பயிற்சி செய்வது போன்ற விஷயங்களை நம்மால் செய்ய முடியாத நிலைக்கு ஆளாக்கி விடுகிறது. இதனை தடுக்க ஒரு சில பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பது அவசியம்.
இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க :
1. நமது எலும்புகளின் அடர்த்தியே பராமரிக்க தினமும் கால்சியம் நிறைந்த டயட் எடுத்துக் கொள்வது , பால் சார்ந்த பொருட்கள், மீன்கள், பச்சை இலை காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
2. தினமும் பரிந்துரைக்கப்பட்ட அளவிலான தண்ணீரை குடிக்க வேண்டும். இது மூட்டுகளுக்கு லூப்ரிகேஷன் ஆக செயல்படும் என்று கூறப்படுகிறது.
3. எப்போதும் உங்களது அன்றாட உடற்பயிற்சிகளை தொடங்குவதற்கு முன்னர் மூட்டு மற்றும் எலும்புகளுக்கான பயிற்சிகளுடன் கூடிய வாமப் மற்றும் உடற்பயிற்சி செய்து முடித்து பின் கூல் டவுன் செய்ய வேண்டியது கட்டாயம்.
4. எப்போதும் உங்களது உடல் எடையை கூடாமல் அவரவர் உயரத்திற்கு ஏற்றவாறு சரியான உடல் எடையை பராமரித்தல் மிகவும் அவசியம். அதிக உடல் எடையை நமது மூட்டுகள் அதிலும் குறிப்பாக முழங்காலகள் இடுப்பு முதுகு பகுதிகளில் ஏற்படும் தேவையற்ற அழுத்தத்தால் வலியினை ஏற்படுத்தும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
5. அதிகளவு வேலை செய்வதால் ஏற்படும் காயங்களை தவிர்க்க தேவைப்படும் அளவிலான ஓய்வினை எடுத்துக் கொள்ளுங்கள் ஓய்வு எடுத்த பின்னர் செயல்பாடுகளில் ஈடுபட்டால் ஏற்படக்கூடிய அதிகபட்ச அழுத்தம் மற்றும் வலிகளை ஏற்படாமல் தடுத்துக் கொள்ளலாம்.
உங்கள் எலும்புகள் மற்றும் மூட்டுகளின் ஆரோக்கியத்தை தொடர்ந்து கண்காணித்து அதில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்படும் பட்சத்தில் அதற்கான மருத்துவரை சந்தித்து ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுங்கள்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..