பிக்பாஸ்-8 வைல்டு கார்டு போட்டியாளர்கள்…? லிஸ்ட் இதோ..!!
பிக் பாஸ் 8- ஆனது 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது.. இதுவரை மூன்று போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்..
இந்நிலையில் இந்த வாரம் 4வது போட்டியாளராக அன்ஷிதா வெளியேற்றப்பட்டார்.. இதனால் பிக்பாஸ் ரசிகர்கள் தற்போது வைல்டு கார்டு எப்போது வரும் என ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில் இன்று வைல்டு கார்டு சுற்று நடக்கவுள்ளது..
இந்த நிலையில், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த வைல்டு கார்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இன்று என்ட்ரி கொடுத்துள்ளனர். ஆம், ஐந்து புதிய போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வைல்டு கார்டு போட்டியாளர்கள் :
நடிகர் ரானவ், மாடல் வர்ஷினி வெங்கட், விஜய் டிவி டிஎஸ்கே, தமிழ் பேச்சு எங்கள் மூச்சு போட்டியாளர் மஞ்சரி, நடிகர் சிவாஜி தேவ் ஆகிய 5 பேர் வைல்டு கார்டு போட்டியாளர்களாக கலந்து கொள்ளவுள்ளனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..