ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு..!! அஸ்வத்தாமன் கொடுத்த வாக்கு மூலம்..!! அந்த 3 விஷயம்..?
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் ஜூலை 5ம் தேதி சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் 15 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.., அந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது..
இந்த கொலை தொடர்பாக ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் பென்னை பாலு உட்பட 23 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 15 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.., அதன் பின் 8 பேரை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.. அப்போது குற்றவாளி அருள் கொடுத்த தகவலின் படி.., காங்கிரஸ் கட்சியின் இளைஞர் மாநில முதன்மை செயலாளர் அஸ்வத்தமானை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்..
அவர்களை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் பிரபல ரவுடி நாகேந்திரன், மற்றும் அவரது மகன் அசுவத்தாமன் மற்றும் முன்னாள் காங்கிரஸ் நிர்வாகி வழக்கறிஞர் அஸ்வத்தாமனிடம் விசாரணை செய்யப்பட்டது. அப்போது அவர்களிடம் தனித்தனியாக விசாரணை செய்யப்பட்டது.
அஸ்வத்தாமன் கொடுத்த வாக்கு மூலம் :
அந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.., அதாவது ஆம்ஸ்ட்ராங்கு உடன் இணக்கமான நட்பை முதலில் உருவாக்கியுள்ளார்.., அப்போது ஆம்ஸ்ட்ராங்கிடம் “உங்களுக்கும் அப்பாவிற்கும் தானே முன் விரோதம். நான் இணக்கமாக இருக்க விரும்புகிறேன்” என்று ஆம்ஸ்ட்ராங்கை மாமா என்று அழைத்துள்ளார்.. அஸ்வத்தாமனை நம்பிய ஆம்ஸ்ட்ராங் தன்னோடு நண்பராக சேர்த்துள்ளார்.. பின் நாகேந்திரனிடம் கூறி ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல பிளான் போட்டு கொடுத்துள்ளார்.. அதாவது எந்த இடத்திற்கு எந்த நேரத்திற்கு அவர் வருவார் என அனைத்து அப்டேட்களும் கொடுத்துள்ளார் அஸ்வத்தாமன்..
இவ்வாறே அந்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். கடந்த 4 நாட்களாக அஸ்வத்தாமனிடம் நடத்தப்பட்ட போலீஸ் விசாரணையில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய அருள் எங்களை அணுகினார். அப்போது நான் அப்பாவிடம் கேட்டு சொல்கிறேன் என கூறினேன்.. அதன் பிறகு அனைத்தும் நல்லவிதமாக முடிந்தால் கொலை செய்வதாக ஒத்துக்கொண்டேன்..
இந்த கொலையை செய்ய ஒப்புக் கொள்ள மூன்று காரணங்கள் இருக்கிறது. அதில் முதல் காரணம் ஒரக்காடு நிலப்பிரச்சினை., அதில் எங்களை உள்ளே நுழைய விடாமல் ஆம்ஸ்ட்ராங் தடுத்தார். இதனால் எங்கள் வருமானம் பாதிக்கப்பட்டது.
இரண்டாவது ஜெயப்பிரகாஷை துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய வழக்கில் ஆம்ஸ்ட்ராங் கொடுத்த புகாரின் பேரில் என்னை கைது சிறையில் அடைதார்கள் அது எனக்கு மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தியது.
மூன்றாவது காரணம் பகுஜன் சமாஜ் கட்சி மாவட்டச் செயலாளர் தென்னரசு கொலை வழக்கில் எனது தந்தை நாகேந்திரனை குற்றவாளியாக கைது செய்யபட்டார் .. இப்படி பல முன்விரோத காரணங்களால் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய ஒத்துக்கொண்டேன்..
வாக்கு மூலங்களை பெற்ற காவலர்கள் விசாரணையை அடுத்த கட்ட நடவடிக்கைக்கு எடுத்து சென்றுள்ளனர்.. இதற்கிடையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய சம்போ செந்தில் தலைமறைவாக இருப்பதால் அவரை தேடும் பணி தீவிரமாக்கப்பட்டு அவர் தாய்லாந்தில் இருப்பதாக தகவல்கள் கிடைத்ததின் பேரில். அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..