தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளர் மாற்றம்..!! உடனடியாக பொறுப்பில் அமர்ந்த முருகானந்தம்..!
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உடன் தனிச் செயலாளராக இருந்த முருகானந்தம். அவர்களை தமிழக அரசு, தலைமைச் செயலாளராக நியமனம் செய்துள்ளது. தலைமைச் செயலாளராக இருந்த இறையன்பு கடந்த ஆண்டு ஜூன் 30ம் தேதியுடன் ஓய்வு பெற்ற நிலையில் அடுத்து புதிய தலைமைச் செயலாளராக சிவதாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார்..
ராஜஸ்தானை சேர்ந்த சிவதாஸ் மீனா, தற்போது ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் (RERA) தலைவராக பொறுப்பில் உள்ளார். அந்த மாற்றம் நேற்று நிகழ்ந்தது. அதையடுத்து புதிய தலைமைச் செயலாளர் யார் என்ற கேள்வி குறித்து நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.., அதில் தமிழ்நாடு காவல் சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற சுனில் குமார் நியமிக்கப்பட்டதை அடுத்து தலைமைச் செயலாளர் மாற்றப்படுவார் என்ற பேச்சு அடிபட்டது
2021-ம் ஆண்டு மே மாதம் தமிழ்நாடு முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் மத்திய அரசுப் பணியில் இருந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஷிவ்தாஸ் மீனா, நகராட்சி நிர்வாகத் துறையின் கூடுதல் தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டார். முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த பின் நிதித்துறை செயலாளராக இருந்தவர் முருகானந்தம் என்பது குறிப்பிடத்தக்கது..
பின்னர், தலைமைச் செயலாளராக இருந்த இறையன்பு ஓய்வு பெற்றதால், கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஷிவ் தாஸ் மீனாவுக்கு தலைமைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஓராண்டுக்கும் மேலாக தலைமை செயலாளராக உள்ள ஷிவ்தாஸ் மீனாவின் பணிக்காலம் வரும் அக்டோபர் மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக இருந்த ஷிவ்தாஸ் மீனா, ரியஸ் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.
இதன் காரணமாக தமிழ்நாட்டுக்கு புதிய தலைமைச் செயலாளர் யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவு வந்தது. இந்நிலையில், தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியமிக்கப்பட்டு உடனடியாக பொறுப்பேற்றுக் கொண்டார். அது போல் சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ராதாகிருஷ்ணன், உணவு வழங்கல் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..