பாஜகவுடன் ரகசிய உறவா..? எடப்பாடி பழனிசாமி கேள்வி..? நச் பதிலடி கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்..!!
பாஜகவுடன் ரகசிய உறவு வைக்க வேண்டிய அவசியமில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி சங்கர் இல்லத் திருமண விழா முதல்வர் மு.க.ஸ்டாலின், பி.எஸ்.திலீபன் – விஷாலி திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் திருமண விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். “கே.பி.பி. சாமி மீனவ சமுதாய மக்களின் நலனுக்காக பாடுபட்டவர்., அவர் வழியில் மீனவர்கள், மற்றும் திருவொற்றியூர் தொகுதி மக்களின் நலனுக்காக பாடுபடுபட்டவர் தான் சங்கர். மக்கள் எளிதில் அணுகும் பிரதிநிதியாக இருந்து சிறப்பாக பணியாற்றி வருகிறார். சிறையில் இருந்தபோது போட்டியிட்டு வெற்றி பெற்றவர் “கே.பி.சங்கர்”.
கலைஞர் நூற்றாண்டு விழாவானது தமிழ்நாடு மட்டுமின்றி வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலும் கொண்டாடப்படுகிறது. கலைஞர் நூற்றாண்டு விழா நடந்ததை போல வேறு எந்த விழாவும் இந்தியாவில் நடந்ததில்லை. என பலரும் கூறுகிறார்கள்.. “கலைஞரின் நினைவிடத்தை பார்க்க வேண்டும் என்று, ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் சென்று பார்வையிட்டார்”. முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் பெயரில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கலைஞரின் பெயரில் கிண்டியில் ஒரு சிறப்பு மருத்துவமனையும் தொடங்கப்பட்டுள்ளது.
பாஜகவுடன் எந்த ரகசிய உறவு வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை எனவும் ராஜ்நாத் சிங்கை அழைத்து விழா நடத்தியதால் பாஜகவுடன் திமுக ரகசிய உறவு என்று எடப்பாடி பழனிசாமி கூறுவது வேடிக்கையானது என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்..
அதனை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கான உரிமைகளை திமுக ஒருபோதும் விட்டுக்கொடுக்காது.. திமுகவின் வரவேற்பும்., எதிர்ப்பும் என்றும் நேரடியாக தான் இருக்குமே தவிர ஒருபோதும் மறைமுகமாக இருக்காது என எடப்பாடி பழனிசாமியின் கேள்விகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நச் பதிலடி கொடுத்துள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..