தினமும் உடல் சோர்வுடன் இருப்பவரா நீங்கள்..? அப்போ இதோ ஃ பாலோ பண்ணுங்க .
உடலில் ஆரோக்கியமும், மனதில் நிம்மதியும் இல்லாமல் அவதிப்படுகிறீர்களா? அப்படி அவதிப்படுகிறீர்கள் என்றால் அதற்கான முழு காரணம். உங்கள் காலை நேர பழக்க வழக்கம் தான். அந்த பழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டுமா? இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.
நம் உடல் மற்றும் மனதை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்வது, மிக முக்கியமான ஒன்று. பகல் இரவு என இரு வேளைகள் இருந்தாலும். நம் உடல் ஆரோக்கியத்திற்கு, பகல் தான் முக்கியமான ஒன்று.
முதலில் தினமும் காலை தூக்கத்தில் இருந்து எழுந்தவுடன், கைகளை கசக்கி கண்களில் வைக்க வேண்டும். காரணம் இரவு முழுதும் நம் உடல் இயக்கமின்றி இருக்கும், கைகளை தேய்க்கும் பொழுது. கைகள் ஆசைப்பு கொடுத்து சூட்டை உருவாக்கும். கண்களில் வைக்கும் பொழுது அந்த சூடு கண் நரம்பிற்கு வேலை கொடுக்கும்.
இரண்டாவதாக நாம் செய்ய வேண்டியது, முகம் கழுவுதல். தூக்கமின்மையை கலைப்பது மட்டுமின்றி, ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கும்.
மூன்றாவது தியானம் அல்லது உடற்பயிற்சி. தியானம் செய்யும் பொழுது மனதை அமைதிப்படுத்தி, மனதை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவும். மனதை ரிலாக்ஸ் செய்து, அன்றைய நாளுக்கான கவனத்தை சிதற விடாமல் பார்த்துக்கொள்ளும்.
உடற்பயிற்சி செய்வதால் கை, கால் உடலுக்கு அசைவு கொடுத்து. உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளும்.
காலை உணவு எடுத்துக்கொள்வது அவசியம், பள்ளிக்கோ, கல்லூரிக்கோ, வேலைக்கோ சென்று சாப்பிடலாம் என நினைக்கும் எண்ணத்தை தவிர்ப்பது நல்லது.
நம்மில் பலரும் இதை பின் பற்றுவதில்லை, காலை எழுந்ததில் இருந்து இரவு தூங்கும் வரை செல்போன் பயன் படுத்திக்கொண்டே இருக்கிறோம்.
செல்போன் பயன்படுத்தும் அந்த நேரத்தை குறைத்து விட்டு யோக, உடற்பயிற்சி போன்றவற்றை செய்தால் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும்.