எந்நேரமும் சமூக வலைத்தளத்தில் மூழ்கி இருப்பவரா நீங்கள்..? அப்போ இதை படிங்க முதல..!
ஸ்மார்ட் போன் வைத்திருக்காத இளைஞர்களோ, குழந்தைகளோ நம்மால் பார்க்காமல் இருக்கவோ முடியாது. பலரும் இன்று ஸ்மார்ட் போன் உலகில் மூழ்கி இருக்கிறார்கள். முக்கியமாக சமூக வலைத்தளத்தில்.
நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்று அறியாத அளவிற்கு இன்று ஸ்மார்ட் போன் செயல்பட்டு வருகிறது.. இதனால் பெரிதும் பாதிப்பு அடைந்தவர்கள் இருக்கின்றார்கள். அதில் இருந்து வெளிப்பட முடியாமல் தவிப்பவராக இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.
* முதலில் நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியது, ஒரு நாளைக்கு நீங்கள் எத்தனை முறை ஸ்மார்ட் போன் உபயோகிறீர்கள் என்று தெரிந்துகொள்ள வேண்டும். குறைந்தது 6 மணி நேரத்திற்கு குறைவாக பயன் படுத்தினால் அது தவறில்லை. ஆறு மணி நேரத்திற்கு அதிகமாக பயன் படுத்தினால், நாம் ஸ்மார்ட் போனிற்கு அடிமையாக இருக்கிறோம்.
* தினமும் நாள் ஒன்றுக்கு எத்தனை செயலியை நீங்கள் பயன் படுத்துகிறீர்கள் என்பது பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். படிபடியாக நீங்கள் பயன் படுத்தும் ஆப்ஸ் நேரத்தை குறைத்துக்கொள்ள வேண்டும்.
* நோட்டிபிகேஷன்.., பலரின் மொபைலில் என்று ஆனிலே இருக்கும். அந்த நோட்டிபிகேஷனை பார்த்ததும், மனம் தன்னை அறியாமல் அதை பயன் படுத்தி விட சொல்லி விடும். எனவே முக்கியமான ஆப்ஸ் தவிர மற்ற ஆப்ஸ் நோட்டிபிகேஷனை ஆப் செய்து விட வேண்டும்.
* சில ஆப் களை பயன்படுத்தும் பொழுது நமக்கு நேரம் போவதை தெரியாது, அந்த செயலில் மட்டும் 30 நிமிடத்திற்கு மேல் பயன் படுத்தக் கூடாது என்ற எண்ணத்தை, மனதில் நினைத்துக்கொள்ள வேண்டும்.
* எழுந்தவுடன் ஸ்மார்ட் உபயோகிக்கும் பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.. உறங்க செல்லும் முன் ஸ்மார்ட் போன் உபயோகிக்கும் பழக்கத்தை மாற்றி கொள்ள வேண்டும். இந்த பழக்கத்தை மாற்றிக் கொண்டால். விரைவில் ஸ்மார்ட் போன் அடிக்ஷனில் இருந்து விடுபட்டு விடலாம்.