மேக்கப் செய்யும் பெண்கள் கவனத்திற்கு..!!
பல பெண்கள் முகத்தை இன்னும் அழகாக காட்டு வதற்காக மேக்கப் செய்வது வழக்கம். முக்கியமாக விஷேங்களுக்கு செல்லும் பொழுது மேக்கப் செய்வது தவறில்லை, அதை எப்பொழுதாவது ஒருமுறை தான் நாம் செய்கிறோம்.
ஒரு சில பெண்கள் தினமும், மேக்கப் செய்வார்கள் இந்த பதிவு அவர்களுக்கு மட்டும் தான்..
மேக்கப் செய்வது தவறில்லை, ஆனால் சில விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
* மேக்கப் செய்யும் பிரஷை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். பிரஷை சுத்தம் செய்யாமல் மேக்கப் போடும் பொழுது அதில் இருக்கும் கிருமிகள் முகத்தை அதிகம் பாதிப்படைய செய்யும். நோய் அபாயம் ஏற்படக்கூடும்.
* முகத்தில் பிரஷை பயன்படுத்தி விட்டு மீண்டும் அந்த கீரிம் அல்லது மேக்கப் ஐட்டத்திற்குள் வைக்கும் பொழுது இறந்த செல்கள் மீண்டும் அதினுள் சென்று விடும்.
* சுத்தம் செய்யாத பிரஷை முகத்திற்கு பயன் படுத்தும்பொழுது, நோய்கிருமி மற்றும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் சரும வெடிப்பு மற்றும் முகப்பரு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
ஆனால் இதை சரிசெய்ய சில வழிமுறைகள் இருக்கின்றது அவற்றை பார்க்கலாம்.
* 3 சொட்டு சோப்பு லிக்குவைட்டை தண்ணீரில் நிரப்பி ஒரு கப்பில் போட்டு மேக்கப் பிரஷ் அனைத்தையும் அதில் போட்டு 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் அவற்றை கழுவி காட்டன் துணியில் துடைக்க வேண்டும்.
* வாரத்திற்கு ஒரு முறையாவது இதை செய்ய வேண்டும்.
* ஐலைனர், ஃபவுண்டேஷன் க்ரீம் புராடட்களை பயன்படுத்திய பின் சுத்தம் செய்வது அவசியம்.
* பவுடர் வகையான மேக்கப் புராடட்களை பயன் படுத்தும் பொழுது அவற்றை க்ளீனிங் ஸ்ப்ரே வைத்து சுத்தம் செய்யலாம்.
மேலும் இதுபோன்ற பல குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..