சிவன் மற்றும் பார்வதியின் மாடவீதி உலா காண கண்கோடி வேண்டும்…
திருவண்ணாமலையில் தீபத்திருவிழாவையொட்டி அண்ணாமலையார் சிம்மவாகனத்திலும், பராசக்தி அம்மன் அன்னவாகனத்திலும் மாடவீதி உலா நடைபெற்றது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி கோலாகலமாக நடைபெற்று வரும் கார்த்திகை தீபத்திருவிழாவின் மூன்றாம் நாள், அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலையம்மன் சிம்மவாகனத்திலும், பராசக்தி அம்மன் அன்னவாகனத்திலும் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
தொடர்ந்து பஞ்ச மூர்த்திகள் சிம்மவாகனத்திலும் அன்னவாகனத்திலும் ஒன்றன்பின் ஒன்றாக சென்று கோயிலின் நான்கு மாடவீதிகளை சுற்றி பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
இந்நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Discussion about this post