ADVERTISEMENT
வாணியம்பாடி அருகே நீட் தேர்வு விலக்கை வலியுறுத்தி திமுக சார்பில் கையெழுத்து இயக்கம்!!!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நீட் தேர்வு விலக்கை வலியுறுத்தி திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஜாப்ராபாத் ஊராட்சி பகுதியில் நீட் தேர்வு விலக்கு வலியுறுத்தி ஆலங்காயம் மேற்கு ஒன்றியம் ஜாப்ராபாத் ஊராட்சி திமுக கிளை கழகம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட சிறுபான்மை நல பிரிவு துணை அமைப்பாளர்கள் முஹம்மத் சலீம், நூர் முஹம்மத் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட திமுக சிறுபான்மை நல பிரிவு அமைப்பாளர் சையத் ஹபீப் கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வத்தார்.
இதில் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு நீட் தேர்வு விலக்கை வலியுறுத்தி கையெழுத்திட்டனர்.
நிகழ்ச்சியில் கட்சியின் கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Discussion about this post