உலகசாதனை புத்தகம் வெளியீட்டு விழா-“தஞ்சாவூர்”
தஞ்சாவூரில் 7 அடி உயர திருக்குறள் மற்றும் கதைகளை கொண்ட உலகசாதனை புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது.
தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகம், அறிவியல், தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் பெரம்பலூர் அகழ்கலை இலக்கியமன்றம் இணைந்து தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் ஆயிரத்து 330 திருக்குறளுக்கும், ஆயிரத்து 330 கதைகளை கொண்ட 7 அடி உயர புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் பட்டிமன்ற நடுவரும், பத்மஸ்ரீ கலைமாமணி சாலமன்பாப்பையா, தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் ஒளவை ந.அருள், தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
உலகப்பொதுமறை நூலான திருக்குறளை பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் ஆயிரத்து 330 திருக்குறளுக்கும், 133 எழுத்தாளர்களை கொண்டு ஆயிரத்து 330 கதைகள் எழுதப்பட்ட 7 அடி உயர புத்தகம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.
இதற்கான சான்றிதழை பாண்டிச்சேரி ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் வெங்கடேசன், அகழ்கலை இலக்கியமன்ற நிறுவனர் வினோதினியிடம் வழங்கினார்.
முன்னதாக சிறப்பு விருந்தினர்களை வரவேற்கும் வகையில், திருவள்ளுவர் வேடமணிந்த குழந்தைகள் வரவேற்று, பின்னர் ஸ்ரீ ஆடல் வல்லான் நாட்டியாலயா குழுவினரின் பரதநாட்டியம், மற்றும் தமிழக கலாச்சார நடனங்கள் ஆகியவை நடைபெற்றன.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.