அண்ணாமலை இருக்க அப்போ டெல்லிக்கு சென்ற அந்த புள்ளி..? தமிழிசை கண்டிப்பு..!
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது தலைமை பதவி மாற்றம் செய்ய இருப்பதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.. அது தொடர்பான கேள்விக்கு இன்று அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்னும் சில நாட்களில் லண்டன் சென்று அங்கேயே தங்கி அவரது வேலைகளை செய்துக்கொள்ளப்போவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.. அதேசமயம் தமிழ்நாட்டின் பாஜக நிர்வாகிகள் பலர் அடுத்தடுத்து பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் கூட பாஜக சிந்தனையாளர் பிரிவின் மாநில பார்வையாளர் கல்யாணராமன் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததற்கு காரணம் அண்ணாமலை என சமூக வலைத்தளங்களில் அண்ணாமலை பற்றி பேசியதற்காக பணியில் இருந்து நீக்கப்பட்டார்..
அதன்பிறகு பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச் செயலாளர் திருச்சி S.சூர்யா கட்சியின் கட்டுப்பாட்டுகளை மீறி கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல் பட்டதால் மாநில தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.., அதுகுறித்த பிரத்யேக தகவல்களையும் அண்ணாமலை வெளியிட்டிருந்தார்..
இப்படி இருக்க மற்றொரு பக்கம் அண்ணாமலைக்கு.., தமிழிசை சௌந்தரராஜனுக்கும் இடையே.., அடிக்கடி மோதிக்கொள்வதாக பாஜக நிர்வாகிகள் பலர் கூறி வந்த நிலையில்..,
பாஜக செயல்பாடு குறித்து தமிழிசை சௌந்தரராஜன் அண்மையில் பேசியுள்ளார். அதில் அவர் பேசியதாவது “கட்சிக்காக கடுமையாக உழைக்க கூடியவர்களில் நானும் ஒருத்தி..,
உட்கட்சி ஐடி நிர்வாகிகளை நான் கடுமையாக எதிர்க்கிறேன்.., எதிர்பது மட்டுமின்றி அவர்களுக்கு எச்சரிக்கையும் விடுகின்றேன். இதற்கு தலைவர்கள் யாராவது கருத்து சொன்னால் அவர்களை அவதூறாக பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். கட்சியின் பிற தலைவர்கள் பற்றி அவதூறு பரப்பினால் அவர்கள் மீது சட்டம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என இவ்வாறே தமிழிசை பேசியுள்ளார்.
இப்படி பட்ட சூழலில் இங்கிலாந் ஆக்ஸ்போர்டு பல்கலை கழகத்தில் “சர்வதேச அரசியல்” பல்கலை கழகத்தில் அண்ணாமலை படிக்க செல்லப்போவதாக. அண்ணாமலை தெரிவித்திருந்தார்.. இந்தியாவில் இருக்கும் 12 அரசியல் தலைவர்களை ஆக்ஸ்போர்ட் கழகத்திற்கு படிப்பதற்காக அழைப்பது வழக்கம். அப்படி தான் அண்ணாமலை இந்த முறை தேர்வாகி உள்ளார். அதற்காக தான் அண்ணாமலை இங்கிலாந்து செல்லவுள்ளதாகவும் 4 – 5 மாதங்களில் மீண்டும் இந்தியா வரவுள்ளதாகவும் அண்ணாமலை கூறியுள்ளார்.. இதனால் அவரது தலைவர் பதவி மாற்றப்பட்டு கட்சி மேலிடம் அவருக்கு வேறு பதவி கொடுக்குமா அல்லது பதவிகள் நீக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது அதற்கும் அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.
நான் எப்போதும் பாஜகவின் தொண்டன்.. ஒரு தொண்டனாக இருந்து கட்சி தலைமை முடிவுகளை எடுக்க பாடுபடுவேன்.. என பதில் அளித்துள்ளார். இந்நிலையில் டெல்லி மேலிடத்திற்கு அண்ணாமலை பயணம் மேற்கொள்ளவுள்ள அதே சமயம் வேறு ஒரு அரசியல் புள்ளியும் பாஜக சார்பில் டெல்லிக்கு புறப்பட்டுஉள்ளதாகவும் அவரை அழைத்து டெல்லி பாஜக மேலிடம் முக்கியமான சில ஆலோசனைகளை செய்ய தொடங்கி உள்ளதாகாவும். தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..