சென்னை மண்ணடியில் வாலிபருக்கு நேர்ந்த சோகம்..! பரபரப்பான மண்ணடி..!
சென்னை மண்ணடி லிங்கி செட்டி அருகே 35 வயது நபர் ஒருவர் உடலில் வெட்டுக் காயங்களுடன் ரோட்டில் விழுந்து கிடப்பதாக நேற்று நள்ளிரவு போலீஸ்-க்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் அங்கு வந்த அதிகாரிகள் உடலை மீட்டு சென்னை ஸ்டாலின் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்..
அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட பின் இன்று காலை அவரிடம் விசாரணை செய்துள்ளனர் அப்போது பல திடுக்கிடும் தகல்வல்கள் வெளியானது.. எனது பெயர் நவாஸ்கான் நான் 50 லட்சம் ரூபாய் பணத்துடன் தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத 5பேர் கொண்ட சில மர்ம நபர்கள் என்னை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி 50 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். நான் அவர்களை பிடிக்க முயன்ற போது என்னை தாக்கி சென்றுவிட்டனர்.. அதன் பின் நான் மயக்க நிலைக்கு சென்றேன் என கூறினார்..
பின்னர் நவாஸ்கான் அளித்த புகாரின் பேரில் வடக்கு கடற்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..