அண்ணாமலை ஒரு அவசரக் குடுக்கை.., அரைவேக்காடு..! ஆர்பி உதயகுமார்..!
மதுரை அட்சய பாத்திரம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி காந்தி மியூசியத்தில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன், உள்ளிட்டோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
பின் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது தமிழகத்தில் தற்போது அரசியலில் வெத்து விளம்பரம், வெளிச்சம் காட்டும் வகையில் போய்கொண்டு இருக்கிறது. சில அரசியல் அனுபவம் இல்லாதவர்கள், பொது வாழ்க்கையில் அனுபவம் இல்லாதவர்கள், அவதூறு பரப்பி நாக்கில் நரம்பு இல்லாத வகையில் அரசியல் பண்பு இல்லாமல் அண்ணாமலை பேசிகிறார்.
தலைவர் எடப்பாடி மீது அவதூறு பரப்பி அடிப்படை ஆதாரம் இல்லாமல் பேசுவது கடும் கண்டனதிற்கு உரியது. தன்னை முன்னிலைப்படுத்தி கொள்வதற்காக தேவையான அனுபவம் தகுதி வேண்டும். ஆனால் அண்ணாமலை பெற்றுள்ளாரா..? எதுவும் இல்லை.
கற்பனையை கொட்டி விட்டு கனவுலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது அண்ணாமலையின் பேச்சில் தெளிவாக காட்டுகிறது. எடப்பாடி பற்றி நாக்கூசாமல் அவதூறு பரப்பி வருவதை சாமானிய தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
அவர் கடந்த 50 ஆண்டு கால பொது வாழ்வில் ஆற்றிய சேவை அதிமுகவினரால் மட்டுமல்ல, மக்களாலும் மறைக்க முடியாது. கிளைக் கழக செயலாளராக இருந்து தொடர்ந்து 50 ஆண்டு காலம் ஒரே கட்சியில் பணியாற்றி அம்மாவின் அமைச்சரவையில இருந்து சேலத்திற்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செய்து கொடுத்தவர் எடப்பாடி.
அதன் பின் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்து தமிழகத்திற்கு பல்வேறு சேவைகள் செய்தார். 7.5 சதவிகித இட ஒதுக்கீடு கொண்டு வந்து மருத்துவ கனவை நினைவாக்கி வரலாற்றில் இடம் பிடித்தவர். அதையெல்லாம் மறைக்கும் விதமாக இன்று அண்ணாமலையின் அவதூறு பிரச்சாரம் இருக்கிறது.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாரத பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதனை தொடர்ந்து நட்டா, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங் உட்பட 15 மூத்த அமைச்சர்கள் களத்தில் நின்று தேர்தல் பிரச்சாரம் செய்தனர் ஆனால் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட அவர்களால் இடம் பிடிக்க முடியவில்லை.
அதற்கு காரணம் அண்ணாமலை போன்ற அவசரக்குடுக்கை, அரைவேக்காடு தான் காரணம். எடப்பாடியை கண்ணாடி பார்க்க வேண்டும் என சொல்லும் அண்ணாமலை. முதலில் அவர் முகத்தை கண்ணாடியில் பார்க்க வேண்டும் அப்போது தான் அவருக்கு புரியும்.
பிஜேபியில் தற்போது கிரிமினல் பின்புலம் அதிகமாகிவிட்டது. அதனை சிலர் முன்னிலை படுத்த தற்போது பாஜக மீது கைது வழக்கு தொடரப்பட உள்ளது. பிஜேபிகாக உழைத்த மூத்த தலைவர்கள் எல்லாம் இப்போ அண்ணாமலையை புறக்கணிகிறார்கள் என்றால் அண்ணாமலை செயல் எந்த அளவிற்கு இருக்கும் என பார்த்துக்கொள்ளுங்கள்..
அண்ணாமலைக்கு எப்போதும் ஏமாற்றம் மட்டுமே கிடைக்கும். அண்ணாமலைக்கு குறிப்பாக எலும்பு இல்லாத நாக்கு இருக்கிறது என சொல்லலாம். அவர் பேசினாலே தொண்டர்களே வெகுண்டு எழுவார்கள். அரவேக்கட்டுத்தனமாக வார்த்தைகளை சிதற விடுவதால். பாஜகவிற்கு தான் பிரச்சனை. அதிமுகவுக்கு எந்த பின்விளைவும் இல்லை. அதிமுக என்றும் எடப்பாடி பக்கம் இருக்கிறோம் என்பதை அண்ணாமலை புரிந்துக்கொள்ள வேண்டும்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..