பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு 28 இந்திய எம்.பி.க்கள் தேர்வு…!
பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு இதுவரை இல்லாத அளவில் 28 இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 650 தொகுதிகளுக்கான தேர்தல் ஜூலை 4ம் தேதி நடைபெற்றது. இதில் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி, பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி, லிபரெல் டெமோகிராட்ஸ் கட்சி ஆகியவை வேட்பாளர்களை நிறுத்தி இருந்தது.
தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி 121 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றது.
எதிர்க்கட்சியான தொழிலாளர்கள் கட்சி 412 தொகுதிகளில் வென்றது. இதனால் கன்சர்வேட்டிவ் கட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்தது. பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வி அடைந்துள்ளது. அதன் மூலம் தொழிலாளர் கட்சி பெரும்பான்மையை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.
இந்நிலையில், தோல்விக்கு பொறுப்பேற்று கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவியை பிரதமர் ரிஷி சுனக் ராஜினாமா செய்துள்ளார். கட்சித்தலைவர் பதவியை ராஜினாமா செய்ததன் மூலம் பிரதமர் பதவியையும் ரிஷி சுனக் இழந்துள்ளார்.
உங்களின் கோபம், ஏமாற்றம் ஆகியவற்றை உணகிறேன் என்றும், தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன் எனவும் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். மேலும், தன்னை போட்டியிட்டு வென்றுள்ள கெய்ரை பொதுநலமிக்க மனிதன் என்றும் அவர் சுனக் தெரிவித்திருந்தார்.
பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு இதுவரை இல்லாத அளவில் 28 இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் தேர்வாகி உள்ளனர். பிரிட்டனில் நடந்த பொதுத்தேர்தலில் இந்திய வம்சாவளியினர் அதிகளவில் வெற்றி பெற்றுள்ளனர். பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறினார்.
பின்பு உமா குமரன் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார். பிரிட்டனில் நடந்த பொதுத்தேர்தலில், ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வியை சந்தித்தது. கெயிர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது.
இந்த தேர்தலில் மொத்தம் 107 இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இருப்பினும் சிலர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். அதிக இந்திய வம்சாவளியினர் கன்சர்வேட்டிவ் கட்சியைவிட தொழிலாளர் கட்சி சார்பில் களமிறங்கி அதிகம் பேர் தேர்வாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..