ஆனி மாத பெளர்ணமி விரதம்..! சிவபெருமானுக்கு உகுந்தது..!!
ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி அன்று விரதம் இருந்து வழிபாடு செய்து வந்தால் நினைத்த செயல்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.
ஆனி மாதம் அன்று பெளர்ணமி விரதம் இருந்தால் சந்தோஷமான வாழ்க்கை கிடைக்கும்.., பெளர்ணமி விரதம் இருப்பவர்கள் ஆனி மாதம் பெளர்ணமி அன்று விரதம் இருந்து, மாலை சந்திர உதயத்தின் போது சந்திரனையும்.., அம்மனையும் தரிசனம் செய்ய வேண்டும். இந்த விரத வழிபாட்டை செய்தால் வாழ்வில் நாம் செய்யும் அனைத்து செயல்களும் வெற்றி கொடுக்கும்..
தேவர்கள் காலத்தில் பெளர்ணமி தினத்தன்று, தேவர்கள் அன்னையின் நாமத்தை ஜெபித்தபடியே தியானமும் தவமும் செய்து அன்னையின் முழு அருளையும் பெறுவார்கள். அதைபோல் நாமும் பெளர்ணமி இரவு தியானம் பூஜைகள் மற்றும் தவம் இருந்து வழிபட்டால் இறைவன் சக்தி முழுவதும் கிடைக்கும் என்று ஆன்மீக உண்மை.
இந்த நாளில் சிவன் கோவில் அல்லது முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டால் எண்ணங்கள் ஈடேறும் என்பது ஐதீகம்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்
Discussion about this post