15மந்திரிகளை கட்சி பணிக்கு அனுப்ப முடிவு செய்த பிரதமர் மோடி..?
அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கு பாரதிய ஜனதா கட்சி தற்போதில் இருந்தே தயாராக தொடங்கி விட்டதாக பாஜக கட்சியினர் கூறுகின்றனர்.
இந்த முறை அதிக இடங்களில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி பல்வேறு செயல்கள் செய்து வருவதாகவும்.., அதற்கான ஆலோசனைகள் வழங்கி வருவதாகவம் சொல்லப்படுகிறது.
கடந்த 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிக அளவு கூட்டணி இல்லாததால் ஒரு சில இடங்களில் தோல்வி ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தலில் அதுபோல் நடக்க கூடாது என்பதற்காக பிரதமர் மோடி அதிக இடங்களில் கூட்டணி வைத்துக்கொள்ள இருப்பதாக முடிவு செய்துள்ளார்.
அதற்காக பல்வேறு மாநில கட்சி தலைவர்களிடமும் பாஜக மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே பாரதிய ஜனதா கட்சியை மேலும் வலுப்படுத்த பல செயல்களை பிரதமர் மோடி செய்து வருவதாக கட்சியின் மூத்த தலைவர்கள் கூறுகின்றனர்.
அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் தேர்தலுக்கு வெற்றி பெறுவதற்காக பல மாற்றங்கள் பிரதமர் மோடி செய்து இருப்பதாகவும். அதற்கான ஆலோசனைகள் கொடுத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
அதற்காக இன்று காலை பிரதமர் மோடி, பாஜக மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மந்திரி சபையில் பிரதமர் மோடி தலைமையில் பெரிய அளவில் கட்சியை மாற்றம் செய்வது குறித்து ஆலோசித்துள்ளனர்.
இந்த கூட்டத்தில் மத்திய மந்திரிகளில் யார் யாருக்கு எந்த மாநிலத்தில் என்ன பொறுப்பு கொடுக்கலாம், மத்திய மந்திரிகளில் யார் யாரை கட்சி பணிக்கு அனுப்பலாம் என்பது பற்றி தீவிரமாக விவாதித்துள்ளனர்.
இந்த ஆலோசனையில் சுமார் 15 மந்திரிகள் நீக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளனர். மத்திய மந்திரிகளான வி.கே.சிங், ரூபாலா, பீரேந்தீரகுமார், அஸ்வினி குமார் சவ்பே, தர்மேந்திர பிரதான், பியூஸ்கோயல், கிரிராஜ் சிங், பசுபதி குமார் பரஸ், நரேந்திர தோமர், மகேந்திர பாண்டே , அஜய் மிஸ்ரா ஆகியோர் கட்சி பணிக்காக அனுப்பப் படுவார்கள் என்றும் பாஜாகாவினர் தெரிவித்துள்ளனர்.
அதற்கு பாஜக மூத்த மந்திரிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
Discussion about this post