உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தனது நிறுவனம் தயாரித்துள்ள அதிநவீன ரோபோவை அறிமுகம் செய்துள்ளார்.டெஸ்லா வாகன தயாரிப்பின் நிறுவன தலைவரான எலான் மஸ்க் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள தாலோ ஆல்ட்ரோ என்ற இடத்தில் ஏ.இ.ஏ எனப்படும் செயற்கை நுண்ணறிவு கண்காட்சி நடைபெற்று வருகிறது.
https://twitter.com/teslaownersSV/status/1576022300910006272?s=20&t=thFwA5FwoJctoethTo74ew
இதில் பங்கேற்ற டெஸ்லா அதிபர் எலான் மஸ்க் ‘ஆப்டிமஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள நவீன ரோபோவை அறிமுகம் செய்து வைத்தார். அவர் அறிமுகம் செய்த ‘ஆப்டிமஸ்’ ரோபோ பார்வையாளர்களை நோக்கி கையசைத்தது நல்ல வரவேற்பை பெற்றது. இது குறித்து பேசிய எலான் மஸ்க் ‘ஆப்டிமஸ்’ ரோபோ அலுவலகம், வீட்டு வேலைகளை செய்யும். இந்திய மதிப்பில் 16 லட்சம் ரூபாய்க்கு விற்க மஸ்க் முடிவு செய்திருக்கிறார்.
https://twitter.com/elonmusk/status/1576079918806376449?s=20&t=thFwA5FwoJctoethTo74ew
ஆப்டிமஸ் ரோபோவின் சிறப்பு இயல்புகளை விவரித்தார். மிகவும் மலிவான விலையில், அதிக திறன்கள் கொண்ட ரோபோக்களை தயாரிக்கும் எனது கனவு நினைவாகி இருப்பதாக அவர் கூறினார். நமக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் நம்மால் எளிதாக பெற முடியும். இது நமது மனித நாகரிகத்தின் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் என்றார்.