அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸை, நடிகை பிரியங்கா சோப்ரா நேர்காணல் செய்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது . ஜனநாயக தேசிய மகளிர் குழுவின் மாநாட்டையொட்டி அமெரிக்க வெள்ளை மாளிகையில் துணை அதிபர் கமலா ஹாரிஸை நடிகை பிரியங்கா சோப்ரா நேர்காணல் செய்துள்ளார்.
Actress Priyanka Chopra on gun reform: “How are you able to work alongside colleagues that are refusing to budge on this matter? Like how does that happen?”
Vice President Kamala Harris: “It’s called democracy.” pic.twitter.com/hZbd6M2Vtl
— The Recount (@therecount) September 30, 2022
இந்த கலந்துரையாடலில் துப்பாக்கி கலாச்சாரம், பாலின சமத்துவம், தொடர்பான பல கேள்விகளுக்கு கமலா ஹாரிஸ் பதிலளித்தார். இந்த கலந்துரையாடல் பேசிய நடிகை பிரியங்கா சோப்ரா தனது 22 ஆண்டுகால பணியில், முதல் முறையாக ஆண் தொகுப்பாளருக்கு இணையாக தமக்கு ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Priyanka Chopra Jonas, Interviewing VP Kamala Harris at a DNC event today, says after 22 years (!) she has only this year, for the first time, gotten equal pay on a job with a male co-actor pic.twitter.com/h07cTpfUEO
— Cheyenne Haslett (@cheyennehaslett) September 30, 2022
இந்த நிகழ்வு மற்றும் வாஷிங்டன் வருகை தொடர்பான புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டது பற்றியும் நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார். இதனிடையே, பிரியங்கா சோப்ராவின் கணவர் நிக் ஜோனஸ் மற்றும் மகள் மால்டி நியூயார்க்கில் நேரத்தை செலவிடுவதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது .