கற்றாழை என்பது அனைவரின் வீட்டிலும் ஈசியாக வளர்க்கப்படும் ஒரு செடியாகும். இதில் உள்ள ஜெல்லை கொண்டு பெண்கள் முக அழகிற்கும் கூந்தல் அழகிற்கும் பயன்படுத்தி வருகிறார்கள்.
ஆனால் அழகிற்கு மட்டும் இல்லாமல் உடலின் ஆரோக்கியத்திற்கும் கற்றாழையை பயன்படுத்தலாம். சொல்லபோனால் இது ஒரு மருந்து என்றே சொல்லலாம்.
கற்றாழை என்ற மருந்து எதற்கெல்லாம் பயன்படுகிறது என்று பார்ப்போம்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
உடலின் எடையை குறைக்கும்:செரிமானம் நன்றாக நடக்க கற்றாழை ஜூஸ் பயன்படுகிறது உடலில் சேரும் கொழுப்பை தடுக்கிறது இதனால் உடல் எடை கூடாமல் இருக்கும். பருமனாக இருப்பவர்கள் உடல் எடையை குறைக்க கற்றாழை ஜெல் பயன்படுத்தலாம்.
செரிமான பிரச்சனைகள் நீங்கும்: கற்றாழையில் இருக்கும் நொதிகள் மற்றும் நார்ச்சத்துகள் செரிமான செயல்பாடுகளை சீராக்குகிறது இதனால் வயிற்றில் செரிமான தொந்தரவு இருக்காது.
சருமம் மற்றும் முடியின் ஆரோக்கியத்திற்கு:கற்றாழை ஜூஸ் தொடர்ந்து பருகி வந்தால், சருமம் மற்றும் முடியை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம். இதனால், சருமம் பளபளவென ஜொலிக்கும். முடி உதிர்தல் பிரச்சனை இருக்காது.
நச்சுக்களை நீக்கும்: ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் நொறுக்கு தீனி அதிகமாக சாப்பிட கூடியவர்கள்களுக்கு வயிற்றில் இருக்கும் நச்சுக்களை நீக்கி, வயிற்றை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.
பல் ஆரோக்கியத்திற்கு நல்லது:கற்றாழை ஜூஸ் குடிப்பதால், வாய் ஏற்படும் துர்நாற்றம் ஈறுகள் மற்றும் பற்களை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கிறது.