ADVERTISEMENT
டேஸ்டியான நட்ஸ் சாக்லேட் இனி வீட்டிலே…
குழந்தைகள் விரும்பி கேக்கும் சாக்லேட் பல்வேறு ஃப்ளேவர்களில், சுவைகளில் விற்க்கப்படுகிறது.
சாக்லேட் வகைகள் டார்க் சாக்லேட், மில்க் சாக்லேட், வொயிட் சாக்லேட் ஆகிய மூன்று வகைகள் உள்ளன.
இத்துடன் சில பொருட்களை சேர்த்து பலவிதமான சாக்லேட்டுகள் தயாரிக்கப்படுகிறது.
தேவையான பொருட்கள்:
மில்க் சாக்லேட் பார் – 75 கிராம்
கண்டன்ஸ்டு மில்க் – 50 மில்லி
இனிப்பு கோகோ பவுடர் – 2 டீஸ்பூன்
நட்ஸ் கலவை
செய்முறை:
சாக்லேட்டை டபுள் பாய்லிங் செய்து உருக்கிக்கொள்ள வேண்டும்.
அதனுடன் நட்ஸ், கண்டன்ஸ்டு மில்க்கை கலந்து கொள்ள வேண்டும். 30 நொடிகளுக்குப் பிறகு இறக்கி நன்கு கலந்துகொள்ள வேண்டும்.
சாக்லேட் நன்றாக கரைந்த பிறகு ஆறவிடவும். இதை ஒரு சிறிய உருண்டைகளாக பிடித்து, மேலே கோகோ பவுடர் தூவி உருட்டிக்கொள்ள வேண்டும்.
பிறகு கப் கேக் லைனருக்குள் வைத்து ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். இந்த நட்ஸ் சாக்லேட்டை அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.