சத்தான கொள்ளு துவையல்..!
தேவையான பொருட்கள்:
கொள்ளு – 1/2 கப்
எண்ணெய் – 2 தேக்கரண்டி
கடலை பருப்பு – 1 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 மேசைக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 15
பூண்டு – 7 பற்கள்
புளி
துருவிய தேங்காய் – 1/2 மூடி
கல்லுப்பு – 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி
தண்ணீர்
எண்ணெய் – 3 தேக்கரண்டி
கடுகு
சீரகம்
கறிவேப்பிலை
செய்முறை:
ஒரு வாணலில் கொள்ளு சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடலை பருப்பு,உளுத்தம் பருப்பு,காய்ந்த மிளகாய்,பூண்டு,புளி,தேங்காய் துருவல்,உப்பு பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
வறுத்த பொருட்களை ஆற வைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
தாளிக்க ஒரு கரண்டியில் எண்ணெய் சேர்த்து கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பின் இதனை அரைத்த கொள்ளு கலவையில் சேர்த்து கலந்து விட வேண்டும்.
அவ்வளவுதான் கொள்ளு துவையல் தயார்.