அதிமுக அவசர செயற்குழு கூட்டம்..!! அடம்பிடிக்கும் சீனியர்கள்..!! தூதுவிட்ட எடப்பாடி..!!
இன்று அதிமுக அவசர செயற்குழு கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் காலை 11 மணிக்கு மேல் நடக்கவுள்ளது.. இந்த அவசர செயற்குழு கூட்டத்தில்
சசிகலா – ஓபிஎஸ் கூட்டணி குறித்து அதிகம் பேச வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது., மேலும் சில கொங்கு மண்டல சீனியர்கள் இதனை எடுத்துப் பேச இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி அவரது ஆதரவாளர்களை தயாராக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக கூட்டணி கட்சி ஆதரவோடு பிரதமர் மோடி மீண்டும் ஆட்சியில் அமர்ந்துள்ளார். ஆனால் தமிழகத்தில் அந்தக் கூட்டணி பரிதாப தோல்வியை சந்தித்தது.
எனவே தேர்தலுக்கு முன் அமைதியாக இருந்த அதிமுக மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டது என சொல்லலாம்.. இதனால் அதிமுகவில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து ஆலோசிப்பதற்காக கட்சி நிர்வாகிகளை தொகுதி வாரியாக எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். அப்போது நடைபெற்ற அந்த ஆலோசனைக் கூட்டத்தில் சில ஆதரவாளர்கள் மீண்டும் சசிகலா, ஓபிஎஸ் ஆகியோரை கட்சிக்கு அழைத்து வர வேண்டுமென குரல்கள் கொடுத்துள்ளனர்.. இந்த தகவல் மீடியா மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய நிலையில்
அப்படி யாரும் பேசவில்லை இது தவறான செய்தி இதுபோன்ற தவறான தகவல்களை வெளியிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிமுக ஒரு எக்கு கோட்டை என ஜெயலலிதா அவரது ஆட்சி காலத்தில் பலமுறை சொல்லி இருப்பார்.. அவரது மறைவுக்குப் பிறகு தற்போது அதிமுக முட்டை போல உடைந்துவிட்டது என சொல்லலாம்..
மேலும் எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்ற பின் தான் அதிமுக அனைத்து தேர்தல்களிலும் படுதோல்வியை சந்தித்து வருவதாக மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த போது நடைபெற்ற இடைத்தேர்தல், அதற்குப் பிறகு மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், நகர்ப்புற, ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள், ஈரோடு இடைத்தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. 2024 மக்களவைத் தேர்தலிலும் 40க்கு 40 என தமிழகம் புதுச்சேரியில் அதிமுக மண்ணை கவ்வியது.
அதிமுக தேர்தல் வரலாற்றிலேயே பார்க்காத ஒன்று எனவும்.., இதனை மீண்டும் மீட்டெடுக்க வேண்டும் என்றால் கூட்டணி வைத்தால் சிறிதாவது வாய்ப்பு இருக்கும் என மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..